img
img

தாய் மொழி காக்கும் தமிழ் மொழி விழா!
வெள்ளி 14 ஏப்ரல் 2017 14:39:34

img

ஜொகூர் பாரு மாவட்ட தேசியப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களைக் கொண்டு தமிழ் மொழி விழா தாமான் யூனிவர் சிட்டி தேசிய பள்ளி 4 இன் மண்டபத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்ற வேளையில் மாவட்டத்திலுள்ள 16 தேசிய பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்மொழி விழாவை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உரையாற்றிய ஜொகூர் பாரு மாவட்ட கல்வி இலாகா அதிகாரி என்.விஜயன் எந்தப் பள்ளியில் படித்தாலும் தாய்மொழி பயில்வதற்கான வாய்ப்பு இருக்குமானால் அந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் பயில்வதற்கு பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். குறைந்தது 15 மாணவர்கள் விரும்பினால் தேசிய பள்ளிகளில் தமிழ் வகுப்பை தொடங்க முடியும் என்ற அவர் இந்த வாய்ப்பை பெற்றோர்கள் கைவிட்டு விடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். தமிழ் மொழி விழாவை சிறப்புடன் ஏற்பாடு செய்த தேசிய பள்ளிகளின் தமிழாசிரியர்களுக்கும் அவர் பாராட்டு களைத் தெரிவித்துக் கொண்டார். தேவாரம், கதை கூறல், நாட்டியம் என பல பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெற்ற வேளையில் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் பிரேமா ராமமூர்த்தி விழாவை திறம்பட ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img