img
img

எதுவாக இருந்தாலும் இந்தியர்கள் போராடித்தான் பெறவேண்டுமா?
வெள்ளி 14 ஏப்ரல் 2017 13:51:10

img

நாட்டின் மிகப்பெரிய தோட்ட நிறுவனமான சொக்ஃபினிடமிருந்து வாங்கப்பட்ட பத்தாங் பெர்சுந்தை அருகில் உள்ள ஐந்து முக்கிய தோட்டங்களின் மேம்பாட்டுக்கு பாடுபட்ட 300 க்கும் மேற் பட்ட பாட்டாளிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வீடுகள், பெர்ஜெயா கார்ப்பரேஷன் நிறுவனம் தர மறுத் ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைமையகத்தின் முன் நேற்று பாட்டாளிகள் வரலாற்றுப்பூர்வமான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். நான்கு தலைமுறையினர் வாழ்ந்த தோட்டங்கள் துண்டாடப்படுவதுடன் அங்கு வாழ்ந்து வரும் 245 குடும்பங்களின் 18 வருட போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நேற்று புக்கிட் பிந்தாங்கிலுள்ள பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவே பேரங்காடிக்கு முன்னால் 300க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சிலாங்கூர் மாநிலத்தில் பத்தாங் பெர்ஜுந்தை அருகிலுள்ள மேரி தோட்டம், நைகல் கார்டன் தோட்டம், புக்கிட் தகார் தோட்டம், மின்ஞாக் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இந்த தோட் டத்து மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த தோட்டங்களில் கடந்த 1900ஆம் ஆண்டில் மக்கள் குடியேறியுள்ளனர். இன்று வரை சுமார் 4 தலைமுறையினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் முக்கிய தோட்ட நிறுவனமான சொக்ஃபினிடமிருந்து கோடீஸ்வரர் டான்ஸ்ரீ வின்சண்ட் டான் தலைமையிலான பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனம் கடந்த 1998ஆம் ஆண்டு இந்த ஐந்து தோட்டங்களையும் வாங்கியது.கிட்டத்தட்ட 95 விழுக்காடு இந்திய பாட்டாளிகள் கடந்த 4 தலைமுறையாக இந்த தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.இதில் மிகப் பெரிய தோட்டமான நைகல் கார்டன் நான்கு டிவிஷனாக இருந்தது குறிப் பிடத்தக்கது. அதன் பின்னர் கடந்த 1999ஆம் ஆண்டு இந்நிறுவனம் சிலாங்கூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ சிவலிங்கத்துடன் இருமுறை சந்திப்பை நடத்திய பின்னர் இந்த 5 தோட்டங்களில் உள்ள மக்களுக்கு சொந்த வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு சுங்கை திங்கி வட்டாரத்திலுள்ள தோட்ட மக்களுக்கு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தலா 4000 சதுர அடி நிலத்தை வழங்குவதாக கடிதம் மூலம் கூறியது. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு இந்நிறுவனம் தோட்டங்களை வேறொரு நிறுவனங்களுக்கு விற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. விற்கப்படவுள்ள தோட்டங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் அங்குள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதாக அந்நிறுவனம் சிலாங்கூர் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்துமிட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு 57 தோட்ட மக்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென புதிய நிறுவனம் கடிதம் அனுப்பியதால் அவ்வாண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்திற்கு முன்னால் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தோட்ட மக்களின் பிரதிநிதியான பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த எஸ்.அருட்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்படி பல வாக்குறுதிகளை அள்ளி வீசி வரும் பெர்ஜெயா நிறுவனத்தின் நிலைப்பாடு உறுதியாக இல்லாத பட்சத்தில்தான் இன்று தோட்ட மக்கள் இங்கு கூடியுள்ளதாக அவர் சொன்னார். காலை 10.30 மணியளவில் தோட்ட மக்கள் பெர்ஜெயாகார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவே பேரங்காடிக்கு முன் கூடி போராட்டம் நடத்தினர். வயதாகி வரும் எங்களால் இனியும் போராட முடியாது எங்களுக்கான வீடுகளை வழங்கிவிடுமாறு அங்கு கூடிய வயதான தாய் மார்கள் கூறினர். தோட்டத் தொழிலாளர் புறக்கணிக்கப்படும் அவலங்கள் இனியும் இந்நாட்டில் நடக்கக்கூடாது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் மக்கள் கேட்டுக் கொண்டனர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிப்பதா என்று எழுதியிருந்த பதாகைகளை ஏந்தி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் காலை 11.30 மணியளவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ சுரினா போராட்டம் நடத்திய தோட்டத் தொழிலாளர்களை பேரங்காடியின் மேல் மாடியிலுள்ள அரங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தை முடிந்து சுமார் பிற்பகல் 12.20 மணியளவில் தோட்ட மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கீழே வந்தனர். இதுவரையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை மீண்டும் பரிசீலனை செய்த பின்னர் தோட்ட மக்களை மற்றொரு சந்திப்புக் கூட்டத்திற்கு அழைப்பதாக டத்தோ சுரினா கூறியதாக அருட்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது டத்தோ சுரினாவுடன் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த டான் கியோன் சாய், கோ யு நீன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். தோட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அவர் டத்தோ சுரினாவிடம் கொடுத்துள்ளார். அவர்களின் பதிலுக்காக நாங் கள் காத்திருப்போம். அலட்சிய போக்கும் கால தாமதமும் ஏற்பட்டால் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என அருட்செல்வன் எச்சரிக்கை விடுத்தபோது அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டு அவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img