தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்னோ / தேசிய முன்னணி அரசாங்கத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. நஜீப்பை கவிழ்ப்பதற்காக அல்ல, பாதுகாப்பதற்காக என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கருத்துரைத் துள்ளார். இந்தக் கூடுதல் நியமனத்திற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. மலேசியா வின் ஆறாவது பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்படும் அபா யத்திலிருந்து நஜீப்பை பாதுகாக்கும் அரசியல் வியூகம் இதில் அடங்கியுள்ளது. பிரதமர் இலாகாவில் அதிகமான அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஹிஷாமுடின் ஹுசேன் பிரதமர் துறையின் 10ஆவது அமைச்சராக விளங்குவார். ஆனால் இவர் இதர ஒன்பது அமைச்சர்களிடமிருந்து வேறுபட்ட வித்தியாசமான அமைச்சராக விளங்குவார். பிரதமர் இலாகாவில் ஹிஷாமுடின் மிக வும் சக்திவாய்ந்த அமைச்சராக திகழ்வார். இவர் மசீச துணைத்தலைவர் டத்தோ வீ கா சியோங் போல அதிகாரம் இல்லாத அமைச்சராக இருக்க மாட்டார். 14ஆவது பொதுத் தேர்தலுக்காக அம்னோ/தேசிய முன்னணியின் பிரச்சார இயக்கத்திற்கு ஹிஷாமுடின் பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபடியும் மத்திய அரசாங்கத்தை அம்னோ / தேசிய முன்னணி அமைப்பதையும் பிரதமராக நஜீப் நீடிப்பதை இது உறுதிப்படுத்தும். மலாய்க்காரர்கள் மத்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதனை சரிக் கட்டுவதற்கு ஒரு வகையில் இந்த நியமனம் உதவலாம். அம்னோவின் அறுபது ஆண்டுகால ஆட்சி இறுதியாக அஸ்தமனம் ஆகலாம் என்று இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கோடி காட்டி யிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்