img
img

அரைத்த மாவையே அரைக்கும் ஆஸ்ட்ரோ!
வெள்ளி 14 ஏப்ரல் 2017 12:46:40

img

மாதம் நூறு வெள்ளிக்கு மேல் கட்டணம் செலுத்துகிறோம். உருப்படியான நிகழ்ச்சிகள் இல்லை. போட்ட படத்தையே எத்தனை தடவைதான் பார்த்துக் கொண்டு இருப்பது? மழை பெய்தால் நிகழ்ச்சி தடைபடுகிறது. கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்பபடமும் இல்லை; தரமும் இல்லை. இதுதான் இன்றைய ஆஸ்ட்ரோவின் நிலை என்று அங்கலாய்க்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் அதே திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து சலிப்பு தட்டிவிட்டது என்கின்றனர் ரசிகர்கள். அரைத்த மாவையே அரைத்து ஆஸ்ட்ரோ எங்கள் காதில் பூச்சுற்ற நினைக்கின்றதா என்றும் அவர்கள் வினவுகின்றனர். அண்மைய காலமாக ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. பார்த்து-பார்த்து புளித்துப் போய்விட்டது. இப் படியொரு சேனலை பணம் கட்டிப்பார்க்க வேண்டுமா? என்று நாங்களே எங்களை நொந்து கொள்கிறோம் என்று கடந்த சில தினங்களாக சமூக வலைத் தளங்களில் ஆஸ்ட்ரோவிற்கு எதிராக ரசிகர்கள் தங்களின் ஆற்றாமையை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் மொழி அலைவரிசைகள் உட்பட பல சேனல்களிலும் திரும்பத் திரும்ப அதே படங்களையும், நிகழ்ச்சிகளையும் எத்தனை நாட்களுக்குத்தான் பார்ப் பது? பிரபலமான திரைப்படங்களை ரசிகர்களின் தேவைக்கு ஏற்ப மறுஒளிபரப்பு செய்யலாம். ஆனால், ஓரளவுக்குத்தான் எங்களால் அதைப் பார்க்க முடி யும், ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், காலாவதியான அல்லது காலங்கடந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது கேலிக்கிடமாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். வெள்ளித்திரையில் (அலைவரிசை 202) ஒளியேறும் நிகழ்ச்சிகள் தீரன் தொலைக்காட்சி தயாரிப்பிலான நிகழ்ச்சிகளாகும். இது இந்தியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம். அதில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பல ஆண்டுகள் தள்ளிப்போன நிகழ்ச்சிகளாகும். அதுமட்டுமல்ல அந்த நிகழ்ச்சிகளை நாம் பார்க்க வேண்டுமானால் 90 ஆம் ஆண்டை ஞாபகப்படுத்திக்கொண்டு நமது வயதையும் சற்று குறைத்துக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு காலம் கடந்த நிகழ்ச்சியாகும். உதாரணமாக, திரை வரிசை என்றொரு நிகழ்ச்சி. வெள்ளித்திரை அலைவரிசையில் ஒளியேற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் தற்போது திரை அரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களை 1 முதல் 10 வரை என வரிசைப்படுத்தி விமர்சிக்கப்படும். ஆனால், இதில் அதிர்ச்சித் தரும் விஷயம் என்னவென்றால், அந்த படங்கள் எல்லாம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலானதுடன், பல தடவை ஆஸ்ட்ரோவிலும் ஒளிபரப்பப்பட்ட படங்களாகும். மற்றுமொரு உதாரணம், கடந்த 22.3.17-ஆம் நாள் இரவு பிற்பகல் மணி 3.30-க்கு ‘டெண்டு கொட்டாய்’ என்ற நிகழ்ச்சி ஒளியேறியது. கபாலி படப்பிடிப்பு பற்றியும், அந்த படம் எப்போது வெளியீடு செய்யப்படும் என்பது பற்றியும் அதன் அறிவிப்பாளர்கள் பேசினார்கள். இதை என்ன கொடுமை என்பது? கடந்த ஆண்டு கபாலி தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்பட்டு விட்டு, ஒரு பழைய படப் பட்டியலில் கபாலி மெல்ல நகர்ந்து கொண்டு இருக் கும் இவ்வேளையில் கபாலி 2 படமும் தயாரிப்பதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது. ஆனால், இன்னமும் கபாலி படத்தில் யார் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, எங்கெங்கே படமாக்கப்படுகிறது? படத்தின் உச்சக்கட்ட காட்சி என்ன? அதில் நடித்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏற்கனவே காட்டப்பட்டு, ரீல்கள் அறுந்த நிலையில் உள்ள ஒரு பட விமர்சனத்தை இன்னமும் உயி ரோட்டம் போல் ஆஸ்ட்ரோ காட்டிக்கொண்டு இருந்தால் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாதா? என்று ரசிகர்கள் வினவினர். இப்படி ஊசிப்போன நிகழ்ச்சிகளுக்கு இன்னமும் சட்னி அரைத்துக்கொண்டு இருக்கும் ஆஸ்ட்ரோவிற்கு நாம் இன்னமும் சந்தாதாரராக இருப்பது நியா யமான ஒன்றா என்று எங்களை சிந்திக்க வைக்கிறது என்று மலாக்காவைச் சேர்ந்த சாலினி முருகன் குறிப்பிடுகிறார். உப்பு, சப்பில்லாமல் எதைக் கொடுத்தாலும் ரசிகர்கள் பார்த்து விடுவார்கள் என்ற மிதப்பில் இருக்கும்ஆஸ்ட்ரோ நடத்துவது ஒரு பகல் கொள்ளை அல் லவா என்று மற்றொரு வாசகர் பதிவிட்டுள்ளார். இந்த பகற்கொள்ளை ரசிகர்களை ஏமாற்றுவதற்கு சமம். நாங்கள் சந்தா செலுத்துகிறோம் தானே? இப்படி பழைய பஞ்சாங்கத்தை பார்க்கவா நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம்? மறு ஒளிபரப்புக்கும், பழைய படங்களை எங்கள் மீது திணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை ஆஸ்ட்ரோ உணர வேண்டும். மேலும் ஒரு விஷயம், விண்மீண் எச்.டி (ஒளியலை 231) தமிழ் நிகழ்ச்சிகளுக்கான ஒரு சேனல்தானே. பிறகு ஏன் அதில் ஆங்கில நிகழ்ச்சிகளை ஒளியேற்ற வேண்டும்? வீ பஸ், நோ பிக் டீல், சூப்பர் மாடல்ஸ் என ஆங்கில நிகழ்ச்சிகளையும் இதில்தானே ஒளியேற்றுகிறார்கள்? இதற்கு ஏன் நாங்கள் சந்தா செலுத்த வேண்டும்?ரசிகர்களை ஏமாற்ற நினைக்கின்றதா ஆஸ்ட்ரோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். 1996 ஆம் ஆண்டு வானளாவிய புகழாரத்துடன் ராக்கெட் போல் படுவேகத்தில் தொடங்கப்பட்ட ஆஸ்ட்ரோ, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும் பாகிவிட்டது. ஊசலாடும் ஆஸ்ட்ரோவை ஏதோ விஜய் டிவி சற்று காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. மழை காலங்களில் நிகழ்ச்சி முற்றாக தடை படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய சைபர் ஜெயாவில் துணைக்கோளம் அமைக்கப்படும் என்று தகவல் துறை அமைச்சர் ஒரு முறை மேலவையில் தெரிவித்து இருந்தார். ஆனால், சைபர் ஜெயாவில் கட்டப்பட்ட பின்னரும் இன்னமும் ஆஸ்ட்ரோவின் துணைக்கோள வண்டி எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை என்று தமிழ் ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிட்டுள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img