மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டத்தோ ஸூல்கிப்லி அகமட் தலைமையில் அதன் அதிகாரிகள் நேற்று மலேசிய நண்பன் அலுவலகத்திற்கு நல்லெண்ண சிறப்பு வருகையை மேற்கொண்டனர். எம்.ஏ.சி.சி. நடவடிக்கைகள் பற்றி மக்கள் மத்தியில் தகவல் சேர்ப்பிக்கும் முக்கியமான ஊடகங்களில் ஒன்றாக மலேசிய நண்பனை தேர்வு செய்து, இந்நாளிதழுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்யும் சாத்தியங்களை ஆராயும் பொருட்டு இவ்வருகை அமைந்தது. மலேசிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் அதிகாரிகளை வரவேற்று, இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். மலேசிய நண்பன் அண்மையக் காலமாக இந்திய சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு வரு வது பற்றியும், குறிப்பாக மக்களுக்கு சேர வேண்டிய உதவித் தொகை களும் மானியங்களும் அவர் களுக்கு முறையாகக் கொண்டு சேர்க்கப்படாதது குறித்தும் டத்தோ ஸூல்கிப்லி அகமட் டிற்கு விளக்கம் அளித்தார். எம்.ஏ.சி.சி-க்கும் மலேசிய நண்பனுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் ஒத்துழைப்பு காணப் படும் பல்வேறு விஷயங்கள் தொட்டும் இச்சந்திப்பில் பேசப் பட்டன. டத்தோ ஸூல்கிப்லி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன், சினிமா பற்றியும் பேசினார். தமிழ்ச் சினிமாவில் நடிகர் விஜய காந்த் நடித்த ரமணாவை ஒரு ரோல் மோடலாக தாம் கருதுவதாக அவர் சொன்னார். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் விஜயகாந்த் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவ ராகவும் இந்த படத்தில் பாகமேற்றுள்ளார். சமூகத்தின் மத்தியில் ஊழலை ஒழிப்பதற்கு அவர் எடுக்கும் அதிரடியான நட வடிக்கைகளை இப்படம் சித்தரிக்கிறது. அந்த ரமணாவாக இந்த ஸூல்கிப்லி வலம் வர நினைக் கிறேன் என்று சற்று நகைச் சுவையாக அவர் கூறினார். எனினும், தனது கடமையில் இருக்கும் கண்டிப்பையும் அவர் வெளிப்படுத்தினார் என்றால் மிகையாகாது. எம்.ஏ.சி.சி. மாதாந்திர காலண் டரில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பு எழுதப் பட்டுள்ளது. ஊழல் புரிவோரில் வாரம் ஒருவரை குறி வைத்து தாங்கள் நடவடிக்கையில் இறங்குவதாக அவர் மேலும் கூறினார். இந்தியர்கள் மத்தியில் ஊழல் தடுப்பு தொடர்பாக மிகப்பெரிய விழிப்புணர்வை மலேசிய நண்பன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் டத்தோ ஸூல்கிப்லி வலியுறுத்தினார். ஊழலற்ற ஒரு மலேசிய நாட்டை காண வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று குறிப்பிட்டுள்ள டத்தோ ஸூல்கிப்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமைப் பொறுப்பாளராக தாம் நியமிக்கப்பட்ட போதிலும் ஒரு குழு வாக இணைந்து பணியாற்றும் தமது அணுகுமுறை ஆக்கப் பூர்வமான பலனை தந்து இருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரம் நண்பன் தலைமையக கூட்டறையில் நடைபெற்ற டத்தோ ஸூல்கிப்லி மற்றும் அவர் தலைமையிலான அதிகாரிகளுடனான சந்திப் பின்போது மலேசிய நண்பன் நிர்வாகி பிரகாஷ், மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் இ.எம்.சாமி மற்றும் செய்தி ஆசிரியர் ராஜேஸ்வரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்