நேற்று இரவு 10.00 மணியிலிருந்து ஜொகூர் மாநிலத்திலுள்ள பெரும்பாலான கேளிக்கை மையங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் 55 வெளிநாட்டுப் பெண்கள், ஒரு உள்ளூர் பெண்மணி உட்பட 63 பேரை கைது செய்தனர். ஜொகூர் பாரு மாநகரம், இஸ் கண்டார் புத்ரி, மூவார் மற்றும் குளுவாங்கில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் ஹீயோரான், நோடா சோதனை வழி கைது செய்யப்பட்ட அவர்களில் எழுவர் ஆட வர்கள் என ஜொகூர் குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் நேற்று இங்கு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதோடு அவர்களில் 17 பேர் மெத்தபெட்டமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது சிறுநீர் சோதனையில் கண்டறிந் ததாகவும் குறிப்பிட்ட டத்தோ கமாருல் சாமான் மாமாட் மொத்தம் 78 பேரிடம் மேற்கொண்ட அச் சோதனையில் 50 போலீசார் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார். குடிநுழைவு சட்டம் கேளிக்கை விடுதி சட்டம் போன்ற சட்டங்களில் கைதான 63 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்