மலேசியாவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனித வள மேம்பாட்டு நிதியகத்தின் ( HRDF ) நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சி.எம்.விக்னேஸ்வரன் அனைத்துலக சம்மேளன பயிற்சி மற்றும் மேம்பாட்டு (ஐ.எஃப்.தி.டி.ஓ.) அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஓமான், மஸ்கட்டில் நடைபெற்ற அனைத்துலக சம்மேளன பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் டத்தோ விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலேசிய இந்தியர் ஒருவர் அனைத்துலக அரங்கில் செயல்படும் முக்கியமான அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டமை மலேசியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். வரும் 2020 ஆம் ஆண்டில் அறிவாற்றல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்த வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு நாடாக மலேசியா உருவாவதற்கு உலகத் தரம் வாய்ந்த ஆள் பலத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த 1993 ஆம் ஆண்டு மனித வள மேம்பாட்டு நிதியகம் உருவாக்கப்பட்டது. போதுமான உயர்கல்வி வாய்ப்பை பெற முடியாத அதேவேளையில் அறிவாற்றல் மற்றும் தாங்கள் சார்ந்த தொழில்துறைகளில் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை கொண்ட மனித வளங்களை மேலும் திறன் பெற்ற தொழிலாளர்களாக உருவாக்கும் மிகப்பெரிய கடப்பாட்டை கொண்டுள்ள மனித வள மேம்பாட்டு நிதியகத்தின் நிர்வாகத் தலைவராக டத்தோ விக்னேஸ்வரன் பொறுப்பேற்றது மூலம் அந்த நிதியகம் மிகப்பெரிய சாதனைகள் செய்து வருகிறது. கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை போன்ற ஆளுமைகளை கொண்ட டத்தோ விக்னேஸ்வரன் அனைத்துலக அளவில் இத்தகைய உயரிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது இந்திய சமுதாயம் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்