கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி லாரணியா கிள்ளான் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பாகவே மரணமடைந்து விட்டதாகவும் இதன் தொடர்பில் சம்பந் தப்பட்ட மருத்துவமனை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்த சுயேச்சை விசாரணைக் குழு வின் விளக்கமும் பதிலும் அதிருப்தியளிப்பதாகக் கூறிய அச்சிறுமியின் குடும்பத்தினர் கடும் ஆட்சேபமும் மறுப்பும் தெரி வித்ததுடன் சம்பந்தப்பட்ட தெங்கு அம்புவான் ரஹிமா பொதுமருத்துவமனையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்கப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் அம்மருத்துவமனையின் அவசரப்பிரிவு வளாகத்தின் முன்பு பதாகைகள் ஏந்தி மறியலில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் நம்பிக்கை இயக்கத் தலைவரின் தலைமையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அம் மறியலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் இயக்குநர் அல்லது துணை இயக்குநர் நேரில் வந்து புகார் மகஜரைப் பெற்றுக் கொண்டு தொடர் விளக்கமளிப்புக் கூட்டத்திற்கு வகை செய்ய வேண்டும் என்று அதிருத்தியாளர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். இருப்பினும், நேரம் ஆக ஆக யாரும் வராததால், அதிருப்தியாளர்கள் சம்பந்தப்பட்ட அவசர சிகிச்சை வார்டின் முன்வாசல் வரைக்கும் சென்று மறியல் செய்து கோஷம் எழுப்பியதால் அங்கிருந்த இதர பொதுமக்களும் திரளத் தொடங்கியதால் அப்பகுதி மேலும் பரபரப்புக்குள்ளாகியது. உடனடியாக அங்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் போலீசார் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினர். அதன் பின் சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு வந்த மருத்துவமனை துணை இயக்குநர் டாக்டர் ரொசித்தா பிந்தி முகமட், மகஜரைப் பெற்றுக் கொண்டு கையொப்பமிட்டார். அவ்வேளையில், இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை சார்பில் அடுத்த அவசர விளக்கமளிப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே, சிறுமி லாரணியா வில்பர்ட் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில், கிள்ளானின் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருக்கும் ரகசிய கேமராக்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் செயலிழந்து கிடக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. சிறுமி லாரணியாவின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்கு நிபுணர்கள் சுயேச்சை குழு ஒன்றை சுகாதார அமைச்சு நியமனம் செய்துள்ளது. சம்பவ தினத்தன்று லாரணியா மருத்துவமனை கொண்டு வரப்பட்ட அந்த கடைசி தருணத்தை தாங்கள் ரகசிய கேமராக்கள் வழி காண வேண்டும் என அச்சிறுமியின் குடும்பத்தினர் கோரியபோது, அந்த ரகசிய கேமராக்கள் 2014-ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் கிடக்கும் தகவல் அவர்களுக்கு தெரி விக்கப்பட்டது. நேற்று காலை நடைபெற்ற முதல் சந்திப்பிற்குப் பிறகு, அந்நிபுணர்கள் குழு வுடனான இரண்டாவது சந்திப்பிற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு அக் குடும்பத்தினர் விஸ்மா சன்வேயிற்கு அழைக்கப்பட்டனர். எனினும், கடந்த மாதம் மரணமடைந்த 4 வயது லாரணியா விவகாரம் தொடர்பாக அக் குடும்பத்தினருக்கு அரை வேக்காடு பதில்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. லாரணியா மரணமடைந்து 20 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை சந்திப்பில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு வந்தது. எழுவர் கொண்ட அக்குழு சுமார் ஒன்றரை மணி நேரம் எங்கள் கதையை செவிமெடுத்தனர் என்று லாரணியாவின் உறவினரான டேவிட் வெள்ளசாமி கூறினார். இது ஒரு தீவிரமான விசாரணையாக எங்களுக்கு படவில்லை. ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் எங்கள் கேள் விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தனர் என்று டேவிட் வெறுப்புடன் தெரிவித்தார். பினாங்கு மருத்துவமனை நிபுணரான டாக்டர் தியோ ஏய்க் ஹோவ் இக்குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்