கடந்த 22.2.1952இல் துரோலாக் சுங்கை சீனோ தோட்ட மருத்துவமனையில் பிறந்த போது, வழங்கப்பட்ட பிறப்புப் பத்திரத்தில் மலேசிய குடிமகன் என்றும் மதத்தால் இந்து என குறிப்பிடப்பட்டிருந்தும், புதிதாக எடுத்த பிரதியில் குடியுரிமை தகுதியும் மதமும் குறிப்பிடப் படாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக ராஜாமணி த/பெ செல்லப்பன் (வயது 65) தெரிவித்தார். தற்போது பத்தாங் காலியில் வசித்து வரும் ராஜாமணி, அசல் பிறப்புப் பத்திரத்தில் பெற்றோர் களின் தகவல்கள் குறிப்பிடப் பட்டிருந்தும் புதிதாக எடுக்கப் பட்ட பிறப்புப் பத்திர பிரதியில் அவர்களின் குடியுரிமை தகுதி, எங்கு வாழ்பவர், என்ன மதம் போன்ற விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என குறிப்பிட்டி ருப்பது ஏன் என வினவினார். தனக்கு இப்பொழுது நீல நிற அடையாள அட்டை இருப்பதாகக் கூறிய அவர், தனது பிறப்புப் பத்திர பிரதியில் ஏன் குடியுரிமை தகுதியை குறிப் பிட வில்லை என்றார். இந்நாட்டில் பிறந்து இன்றுவரை ஓர் இந்துவாக வாழ்ந்து வரும் எனக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதென்றால் எனக்குப் பிறகு எனது பிள்ளைகளின் நிலை என்னாகும் என வினவினார். இவ்விவகாரம் குறித்து தேசிய பதிவிலாகவிடம் காரணம் கோர விருப்பதாகக் கூறிய ராஜாமணி, மற்றவர்களும் புதிதாக எடுக்கப் படும் பிரதிகளில் இத் தகைய குளறுபடிகள் இருக்கின்றனவா என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்