உடல்பேறு குறைந்த ப.கேசவன் (வயது 41) என்பவர் வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி செம்பனை தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் இங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 9ஆம் தேதி மாலை 6 மணியளவில் கேசவன் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரின் மனைவி எஸ்.ரேவதி கூறினார். இரவு நேரம் ஆகியும் தன் கணவன் வீடு திரும்பாததால் கணவரின் அண்ணனிடம் கணவனை காணவில்லை என தெரிவித்ததாக அவர் கூறினார். அதன் பின்னர் கணவனின் அண்ணன் உட்பட உறுவினர்களும் நண்பர்களும் என் கணவனை தேடிப் பார்த்தனர். அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் இவர்கள் சென்று பார்த்தும் என் கணவனை கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் கண்ணீர் மல்க கூறினார். செம்பனைத் தோட்டத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சென்ற ஆடவர் வரும் வழியில் சடலத்தை கண்டதாக என்னிடம் கூறினார். உடனடியாக நான் அங்கு சென்று பார்க்கையில் இறந்து கிடந்தவர் என் தம்பி என்பது தெரிய வந்தது என ப.பிரபாகரன் தெரிவித்தார்.இதன் தொடர்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் பிரிவு 302இன் கீழ் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஜுக்கிர் முகமட் இசா தெரிவித்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டு கொண்டார்.என் மக னுக்கு யாரும் விரோதிகள் கிடையாது. கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கிய என் மகனுக்கு சரியாக நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் போய்விட்டது என கேசவனின் தந்தை பி.பச்சையப்பன் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்