img
img

என் கணவர் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை இல்லை!
செவ்வாய் 11 ஏப்ரல் 2017 17:54:06

img

குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (பொக்கா) -இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விஷ்ணு மூர்த்தி, நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்ற முடிவுக்கு எதிராக தன் மனைவியின் வழி மேல்முறையீடு செய்துள்ளார்.ஆறு மாதக் கர்ப்பிணியான அவரின் மனைவி ஏ.மகேஸ்வரி அந்த மேல் முறையீட்டை பதிவு செய்ததாக விஷ்ணுவின் வழக்கறிஞர் பி.உதயக்குமார் கூறினார். பொக்கா சட்டம் என்றால் என்ன? மலேசியா முழுவதும் குற்றவியல் நடவடிக்கைகளை ஆக்ககரமான வகையில் தடுப்பது, மற்றும் குற்றவாளிகள், குண் டர் கும்பல் உறுப்பினர்கள், பயங்கரவாதிகள், விரும்பத்தகாத நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது ஆகியனவாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்திற்காகவே இவ்வழக்கில் தாங்கள் மேல் முறையீடு செய்வதாக உதயக்குமார் விவரித்தார். என்னுடைய கட்சிக்காரர் ஒரு சிறிய மீன்தான். அவர் ஒரு சாதாரண விற்பனை முகவர். அவரை பொக்கா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கை குடைந்து பார்த்தால், சம்பந்தப்பட்டிருக்கும் நிறுவனம் வீனஸ் ஃபோரெக்ஸ் மோசடியில் சிக்கியுள்ள நிறுவனமாகும். சுமார் எட்டு வெள்ளி மோசடி, ஒரு டான்ஸ்ரீ, ஒரு டத்தோஸ்ரீ, நான்கு டத்தோக்கள் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த மோசடிக்கும் தொடர்புள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்களும் உள்ளன. அனால், அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரிக்கப்படவும் இல்லை, குற்றஞ்சாட்டப்படவும் இல்லை என்று உதயக்குமார் ஜாலான டூத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். பொக்கா சட்டத்தின் கீழ் விஷ்ணுவை 21 நாள் காவலில் வைக்க 2017 மார்ச் 29-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், வர்த்தகக் குற்றவியல் புலன் விசாரணை இலாகாவின் ஆணையர் டத்தோ அக்ரில் சானி பின் அப்துல்லாவின் கீழ் எனது கட்சிக்காரர் விஷ்ணு மூர்த்தி (38) விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வர்த்தகக் குற்றத்திற்காக பொக்கா சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது போன்ற ஒரு குற்றத்திற்கு விசாரணை இன்றி ஒருவரை தடுத்து வைப்பதா? இது போலீஸ் நன்மதிப்பை பிரதிபலிப்பதாக இல்லை என்றார் உதயக்குமார். விஷ்ணுவின் மனைவி மகேஸ்வரி தற்போது 6 மாதக் கர்ப்பிணியாவார். தன் கணவருக்கு நேர்ந்த இந்த நிலைமையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர் தொடர்ந்து இவ்வாறு இருப்பது ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். வீனஸ் எஃப் எக்ஸ் நிறுவனத்தில் என் கணவர் ஒரு விற்பனை முகவர் மட்டுமே. அதன் இயக்குநரோ, பங்குதாரரோ, அல்லது அதன் நிர்வாகத்தில் தொடர்பு உடையவரோ அல்ல. பிறகு ஏன் என் கணவரை பொக்கா சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று மகேஸ்வரி கேள்வி எழுப்பினார். எனக்கு என் கணவர் விடுதலையாக வேண்டும். இது போன்ற நெருக்குதலான சூழல் என் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக் கின்றனர். ஆனாலும், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறினார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். அக்ரில் சானிக்கு இவ்விஷயம் குறித்து ஐந்து கடிதங்களை எழுதியிருக்கிறோம். காவல் நிலையத்துக்கு இரண்டு முறை சென்றிருக்கிறோம். ஆனால், அவர் வழக் கறிஞரை பார்க்கவும் இல்லை, கடிதங்களுக்கு பதில் எழுதவும் இல்லை. போலீஸ் இப்படி நடந்து கொள்வது முறையல்ல. நாம் கடிதம் எழுதினால் அவர் கள் கட்டாயம் பதில் எழுத வேண்டும் என உதயக்குமார் தொடர்ந்து விவரித்தார். அது மட்டுமின்றி, விஷ்ணு மூர்த்தி என்ற தனி நபரின் சட்ட உரிமைகளை சுட்டிக்காட்டி, அவரை பார்க்கும் உரிமை எங்களுக்கு உள்ளது என்பதை வலி யுறுத்தி பெராக்குவான் செகெரா எனும் சட்டப்பூர்வ உரிமைக்காக தாங்கள் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட ஃபோரெக்ஸ் முதலீட்டு நிறுவனம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் இலாகாவில் சிக்கியது. சுமார் 28-38 வயதுக்கு உட்பட்ட ஆறு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு பொக்கா சட்டத்தின் கீழ் 21 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக சுமார் 20,000 முதலீட்டாளர்கள் புகார் செய்திருப்பதாகவும் அக்ரில் ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img