பொதுச்சேவை ஆர்வலர்கள் அண்மை காலமாக அதிகமாக காணாமல் போவது தொடர்பில் போலீஸ் படை கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு அமலாக்க விஷயத் தில் தவறு நேர்ந்துள்ளது. இல்லையென்றால், எப்படி ஆறு மாதங்களில் ஐவர் காணாமல் போயிருக்க முடியும் என்று சுவா ராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கேள்வி எழுப்புகிறார். காணாமல் போவோரின் பட்டியலுக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கிறது. போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் ஐந்தாவது சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டார்.பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் முன்னாள் உறுப்பினரும், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அரசியல் உதவியாளர் பீட்டர் சோங் கடந்த வாரம் காணாமல் போனார். காணாமல் போயுள்ளவர்களின் பட்டியலில் இவர் ஐந்தாவது நபர் ஆவார். இதுவரை காணாமல் போயுள்ள மற்ற நால்வரும், பாதிரியார்களான ஜோஷுவா ஹில்மி, ரூத் (2016 நவம்பர்), ரேமண்ட் கோ கெங் ஜூ (இவ்வாண்டு பிப்ரவரி 13), சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் ஆகியோர் ஆவர். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக கிடைக்கவில்லை என்றும், போலீ சாரும் முறையான தகவலை வழங்க முன் வரவில்லை என்றும் சிவன் மேலும் கூறினார். இதனிடையே, தனக்கெதிராக மறைமுகமான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியதைத் தொடர்ந்து, கடந்த வாரம் காணாமல் போன பீட்டர் சோங், மூன்றாண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த எம்.எச்.370 விமானத்தின் கேப்டனான ஜஹாரி அஹ்மட் ஷாவின் நெருங்கிய நண்பராவார். 2014 மார்ச் 8-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் 239 பேருடன் அவ்விமானம் காணாமல் போனது. அதற்கு ஜஹாரி காரணமாகலாம் என்று பலமுறை தகவல்கள் வெளியான போது அனைத்துலகம் உள்நாட்டு ஊடகங்களில் அவரை தற்காத்துப் பேசியிருக்கிறார் சோங். கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியான பிறகு சோங்கை தாங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரின் குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை போலீசில் புகார் செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்