ஆண்ட பரம்பரை அடிமைகளான வரலாற்றுக்குப் பிள்ளையார் சுழியை மலாயாவில் இட்ட சம்பவத்திலிருந்து இன்று வரை மலேசிய இந்தியர்களின் எண்ணற்ற இன்னல்களுக்கு விடியல் இல்லாமல் நிராதரவாக நிற்கும் நிலையில் இந்திய சமூகத்தின் இந்த இக்கட்டான நிலைக்கான முக்கியக் காரணம் இந்திய சமூகத்திற்குள்ளேயே அடங்கியுள்ளது. 1786இல் சர் பிரான்சிஸ் லைட் (Sir Francis Light) எனும் ஆங்கிலேயர் பினாங் கினை உருவாக்கியதிலிருந்து இந்தியாவின் தென் பகுதிகளி லிருந்து நவீன கால இந்தியர் களின் குடியேற்றம் தொடங் கியதாகவே அறிய வேண்டியுள்ளது! ஆண்ட பரம்பரை அடிமைகளான வரலாற்றிற்குப் பிள்ளையார் சுழியை மலாயாவில் இட்ட சம்பவத்திலிருந்து இன்றுவரை மலேசிய இந்தி யர்களின் எண்ணற்ற இன்னல்க ளுக்கு விடியல் இல்லாமல் நிரா தரவாக நிற் பதற் கான காரணத்தை இந்திய சமூகத்தின் இக்கட்டான நிலைக்கான முக்கிய காரணம் இந்தியச் சமூகத் திற்குள்ளேயே அடங்கியுள்ளது. (டாக்டர் அசோகன் சமூகநாதன் -usm) என்பதன் வழி நிறைவாகத் தெளிய முடியும். வரலாறு படைத்த நம்மினம் முகவரியில்லா நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்களை ஆட்டிப் படைக்கின்றது என ஒரு நூலிற்கு எழுதிய அணிந்துரையில் மா.சந்திரசேகரன் எழுப்பியுள்ள அதே அச்சத்தினை ஏவுகணையும் பெற்றுள்ளதை அறி வுறுத்த விரும்புகின்றது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் சூழலிலும் விடியலே இல்லாத இன்னல்களால் ஆட்பட்டிருக்கும் மலேசிய இந்திய சமூகத்தின் இழிநிலைக்கு முதன்மைக் காரணமாக மஇகாவின் தலைமைத்துவத்தையே குறைகூற வேண்டிய நிர்பந்தம் இருப்பதை யாராவது மறுக்க முடியுமா? *இந்திய தோட்டத் தொழி லாளர்களின் அடிப்படை உரி மைகள். * இந்தியர்களின் அடையாள ஆவண உரிமைகள். * தோட்டத் தொழிலாளர்க ளின் அடிப்படை ஊதியச் சலு கைகள். * தோட்டத் தொழிலாளர்க ளின் வீட்டுடைமைத் திட்ட செயலாக்கம். * புதிய பொருளாதாரக் கொள்கையில் விடுபட்டுப் போன இந்தியர்கள். * உயர்கல்வி மற்றும் அர சாங்கத்துறை வேலை வாய்ப் புகளை இழந்த அவலம். * இடப்பெயர்வு செய்யப் பட்ட தோட்டத் தொழிலாளர்க ளுக்கான நலன்களில் சறுக் கல். * தமிழ்ப் பள்ளிகளுக்கான நிரந்தரமான தீர்வினைக் காண முடியாத இயலாமை. * அரசாங்க வறுமை ஒழிப்புத் திட்டங்களில் காணாமல் போன இந்தியர்கள். * நகர முன்னோடிகளில் (புறம்போக்கு குடியிருப்பு) வீட் டுடைமைத் திட்டத்திற்கு அஸ்தி வாரம் இடாத கோரம். போன்ற இன்னும் பல பல வீனங்களுக்கு முழுமையான பொறுப்பினை ஏற்க வேண்டிய கடமை மஇகாவிற் குத்தான் உண்டு என்பதை தெளிந்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என ஏவுகணை நம்புகின்றது. சமூகத்தினைச் சீரழித்த உட்கட்சிப் பூசல்கள்: மஇகாவின் வரலாற்றில் தோன்றிய காலம் தொட்டு இன்றைய பொழுதுவரை சுமுகமான சூழல் தோன் றியதாக அறியவே முடிய வில்லை. மலேசிய இந்தியர்களின் ஒரே ஒரு அரசியல் பிரதிநிதியாக கடந்த 60 ஆண்டுகளாக எல்லா நிலைகளிலும் உள்ள பதவிகளின் வழி அரசியல்வாதிகளின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்திருக்கும் சாதனைகளை மட்டுமே ஏவுகணையால் பட்டியலிட முடியும். கே.எல்.தேவாசர் - துன் வீ.தி.சம்பந்தன் துன் வீ.தி. சம்பந்தன் - டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் - டத்தோஸ்ரீ ச.சாமிவேலு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு - டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம், டத்தோ வீ.கோவிந்தராஜு, டத்தோ ஸ்ரீ சாமிவேலு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் - டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் டத்தோஸ்ரீ சி.சுப்பிரமணியம் - இனி தொடரும்... என கடந்த 60 ஆண்டுகளாக மஇகாவிடம் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களால் நலிவ டைந்த சமூகமாக நாம் பரிமாணம் பெற்றுள்ளதற்கு அஸ்திவாரம் என்பதை சாதாரண மாகவே நாம் கூறிவிட முடியும். மஇகாவின் இலக்கும், நோக்கமும் அரசாங்கத்தால் வழங்கப்படும் பதவிகளே தவிர, மக்களின் நலன்கள் அல்ல என்பதற்கு ஆயிரக் கணக்கான சான்றுகளை ஏவு கணையால் தர முடியும். மலேசியாவின் அபரிமிதமான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூகவியல் வளர்ச்சிக்கும் எவ்விதமான உட்பூசல்களும் இல்லாமல் 50 ஆண்டுகள் அர சாங்கத்தை வழி நடத்திய தேசிய முன்னணியின் அரசாங்கம் மலாய்க்காரர்களின் எல்லா வகை யான தேவைகளையும் குறிப்பாகப் பொருளாதாரம், கல்வி, அரசாங்கப் பணிகள் மற்றும் நாட்டின் நிர்வாகம் போன்றவற்றை முழு மைப்படுத்த; *முதலாவது நீண்டகாலக் திட்டமான புதிய பொருளாதாரக் கொள்கை (1971 - 1990) *இரண்டாவது நீண்ட காலத் திட்டமான 2020 தொலைநோக்குத் திட்டம் (1991 - 2020) *மலேசிய ஐந்தாண்டுத் திட் டங்கள் (Rmk) - இதுவரையிலும் 11 திட்டங்கள் என எல்லா வகையான தேசியத் திட்டங்களி லும் மலேசிய இந் தியர்கள் விடு பட்டுப் போனதற்கு நாம் யாரைக் காரணம் கூறுவது என்ற கேள்விக் கான பதிலைத் தீர ஆலோசிக்க வேண்டுமென ஏவுகணை ஒவ் வொரு மலேசிய இந்தியரையும் கேட்டுக் கொள் கின்றது. இதுவரையிலும் உட்கட்சிப் பூசல்கள் அனைத்திற்கும் மஇகா வின் உட்கட்சி விவகாரங்களே காரணம் என்பதி லிருந்து விலகி டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோஸ்ரீ ச.சுப்பிரமணியம் ஆகியோருக்கு இடையிலான உட் கட்சிப் போருக்கு அரசாங் கத்தின் தலையீடுகளும் இருக்கின் றதா? என்ற சந் தேகம் பரவலா கவே இருந்து வருவதை ஏவு கணை உணர்ந்துள்ளது. "ஒற்றுமையில் லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்" என்பார்கள். அதைப் போலவே ஒற்றுமையில்லாமலும் தொடர்ச்சியான தலைமைத்துவ உட்கட்சிப் பூசல்களால் மஇகா சுமார் 2.6 மில்லியன் மலேசிய இந் தியர்களின் எதிர் காலத் தையே சூறையாடிவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. இக்கூற்றினை யாராவது மறுக்க முடியுமா? என்ற கேள்வியையும் ஏவுகணை முன் வைக்கின்றது. சமூகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியர்கள்!: 60 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னரும் மலேசிய இந்தியர்கள் அரசாங்கத் திடம் கையேந்தும் நிலைக்கு உட்பட்டிருக்கின்றோமே, அதற்கு மேலாக * 1970லிருந்து 1.5% சொத்து டைமையில் இன்று 1.0%ட்டிற் கும் குறைவாக பதிவு செய்துள்ளோம். * அரசாங்க வேலை வாய்ப் புகளை வெறும் 2%ட்டினை மட்டுமே நிறைவு செய்துள்ளோம். * பொதுப் பல்கலைக் கழக வாய்ப்புகளில் 2.5%ட்டினை மட்டுமே பெற்று வருகின்றோம். * மிகவும் ஏழ்மையான சமூக மாக இந்திய சமூகம் உருமாற்றம் பெற்றுள்ளது. * அரசாங்கத் துறை குத்தகை களைப் பெறும் வாய்ப்புகளைக் கூட வங்காள தேசிகளிடம் தொலைத்துள்ளோம். * வீடற்ற சமூகமாக ஒண்டி வாழும் நிலைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றோம். * தமிழ்ப்பள்ளிகளின் கட்டு மானத்தையும் ஆண்டுக் கணக் கில் தள்ளிப் போட்டிருக்கின்றோம். என்பதை உணர்ந்து உணராதவர்களாக மஇகாவின் தலை மைத்துவமும் மஇகாவின் மேல்மட்ட பொறுப்பாளர்களும் செயல்பட்டு வருவதை யாரா லும் மறுக்கவே முடியாது என் பதாகவே உணர வேண்டியுள் ளது. தேர்தல் காலங்களில் வேட்பாளராக எடுத்துக் கொள் ளும் விவேகமான முயற் சிகளி லும், செயல்பாடுகளிலும் 10%ட் டினை மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான செயல் திட்டங்களில் செலுத்தியிருந்தால் தரமான, வளமான, சுபிட்சமான இந்திய சமூகத்தினை கடந்த 60 ஆண்டு களில் பெற்றிருக்க முடியும் என்பதே ஏவுகணையின் ஆணித் தரமான நம்பிக்கை யாகும். மேல் விவரங்களை நாளை ஆராய்வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்