பாவாடையின் உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் தன்னை பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்தது வியப்பாக இருந்தது என ''WAO'' எனப்படும் பெண்களுக்கான சமூக இயக் கத்தின் துணைப் பொருளாளரும் வழக்கறிஞருமான மீரா சமந்தர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலசேகரனை யும் எம்.இந்திரா காந்தியையும் சந்திக்க இதர அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பி னர்களோடு தாமும் சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது என அவர் குறிப்பிட்டார். திருமணம்-விவாகரத்து சட்ட மறு சீரமைப்பு மசோதா மீதான விவாதம், அடுத்த நாடாளு மன்றக் கூட்டத் தொடருக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தாங்கள் குலசேகரனைச் சந்திக் கச் சென்றதாக மீரா சொன்னார். ஒரு வழக்கறிஞரான எனக்கு நாகரிகமாக உடை அணியும் முறை எப்படி என்று தெரி யும். இதுவரை நீதிமன்றத்தில் கூட அணியும் உடையை காரணம் காட்டி என்னை யாரும் தடுத்து நிறுத்தியதில்லை. அதிலும் நான் அணிந்து சென்ற பாவாடையின் நீளம் குறைவு எனக் கூறி என்னை வளாகத்திலே தடுத்து நிறுத்தினர். நான் ஒன்றும் கவர்ச்சிகரமாக ‘மினி-ஸ்கர்ட்’ அணிந்து செல்ல வில்லை என மீரா விவரித்தார். நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் பெண்களின் உடையின் உயரத்தை விட பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்களை உள்ளே எடுத்து செல்பவர்கள் மீதும் அனுமதி இல்லாமல் இப்பகுதிகளில் நுழைபவர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நாடாளுமன்ற நுழைவாசலில், வருகையாளர் அனுமதி அட்டை கோரிய என்னை, பாதுகாவலர் கள் காரை விட்டு இறங்கச் சொல்லி பாவாடையின் உயரம் குறித்து பரிசோதித்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதுபோல் பெண்களின் உடைகளை, அதுவும் நாடாளுமன்றத்தில் பரி சோதிப்பது மிக அநாகரிகமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்