img
img

மலேசியாவில் படுதீவிரமாக பரவும் தேர்தல் காய்ச்சல்!
ஞாயிறு 09 ஏப்ரல் 2017 12:27:04

img

நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான காய்ச்சல் படுதீவிரமாக பரவி வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கியுள்ளன. இது மலேசிய இந்திய அரசியல்வாதிகளின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளின் வழி அறியத் தொடங்கியுள்ள நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்திய அரசியல் வாதிகள் மக்கள் இருப்பதாக அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமா? மலேசிய இந்தியர்களை அரசாங்கத்தின் சார்பில் அரசியல் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றிருக்கும் ம.இ.கா. மலேசிய இந்தியர்களின் தேவைகளை நிறைவு செய்ததா? என்ற கேள்வியை முன்வைத்தால் எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதை நண்பன் குழுவிவரிக்க வேண்டியதில்லை. ம.இ.கா.வைப் பொறுத்தவரையில் தேசியமுன்னணி மலேசிய இந்தியர்களின் சார்பில் பாரம்பரிய அடிப்படையில் வழங்கிவரும் நாடாளுமன்றம், சட்டமன்றத் தொகுதி களில் பதவிக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி வந்ததன் பலனை நாட்டின்12, 13 ஆவது தேர்தல்முடிவுகளின் வழி அறிந்திருந் தாலும் எவ்விதமான உருமாற்றமும் இல்லாமல் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டிருப்பதாகவே நண் பன் குழு கருதுகின்றது. எதிர்க்கட்சிகளின் சமத்துவ அரசியல் தந்திரம்: மலேசிய இந்தியர்களின் மற்றொரு சாபக்கேடான விவகாரம் தேசிய முன்னணியின் இந்திய வேட் பாளர்களை எதிர்த்து எதிர்கட்சி கூட்டணியான மக்கள் கூட்டணியின் சார்பில் மற்றொரு இந்திய வேட்பாளரை நிறுத்தி இந்தியர்களின் தேவைகளை முன்வைத்து தேர்தல் களம் காண்பதாகும். பிற இனத்தவர்களின் தொகுதியில் இந்திய வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்பினை எப்போதுமே எதிர்க்கட்சிகள் மேற்கொள்வதில்லை என்பதை அனை வரும் அறிவோம். இந்தியர்களின் சார்பில் களம் காணும் எதிர்க்கட்சியின் இந்திய வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்தியர்களின் நலன்கள் பாதுகாக்கப் படும் எனவும், இந்தியர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், தீர்க்க முடியாத விவகாரங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் * இன ரீதியிலான அரசியல் தீர்வினை இந்தியர்களுக்காகச் செய்ய முடியாது. * எல்லோருக்கும் சமத்துவமான நடவடிக்கையே செய்யப்படும். * இந்தியர்களின் தேவைகளை மட்டும் கவனிக்க முடியாது. * ஒரே ஓர் இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் தான் முடிவு செய்வார் என இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வில்லாமல் தடுமாற வைக்கும் அரசியல் நடவடிக்கைகளைத்தான் இதுவரை காண முடிவதாக நண்பன் குழு கருதுகின்றது. உதிரிக்கட்சிகளின் தேர்தல் நரித்தனம்: மலேசிய இந்தியர்களின் மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுவது அரசியல் ஒற்றுமையின்மையே என் பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள் அதைப் போலவே தேர்தல் காலங்களில் இந்தியர் களின் மீதிலான அபரிமிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான செயல்பாடுகளின்வழி மூன்றாம் தரப்பினராக அரசாங்கத்திடமிருந்து பலவகையான அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டு மலேசிய இந்தியர்களின் தேவைகளை காற்றில் பறக்க விட்டு விடும் அவலமான நிலையை கடந்த சில ஆண்டுகளாகவே நண்பன் குழு கவனித்து வருகின்றது. மலேசிய இந்தியர்களிடம் காணப்படும் அரசியல் பலவீனத்தால் ஒட்டு மொத்த இந்திய சமூகமும் ஓரங்கட்டப்பட்டு இருப்பதை இன்னமும் அறியாமல் வால் பிடித்து நிற்கும் துர்பாக்கியமான சூழலில் மாற்றம் வராதோ! என்ற எதிர்பார்ப்பே நண்பன் குழுவிடம் ஏற்பட்டுள்ளது. சேவையா? வேட்பாளர் போட்டியா? : மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் மலேசிய இந்தியர்களை ஒட்டு மொத்தமாகப் பிரதிநிதிக்கக் கூடிய தேர்தல் வேட்பாளர்கள் அறவே இல்லை என்பதை உணர வேண்டும். நாட்டின் 13 ஆவது பொதுத்தேர்தலின் போது ம.இ.கா.விற்கு 9 நாடாளுமன்றத் தொகுதிகளும் 18 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். ம.இ.கா.வைப் பொறுத்தவரையில் தேர்தல் வேட்பாளர்களின் கட்சியின் பதவிகளை வைத்து மட்டுமே நிர்ணயம் செய்யப் படுவதை மறுக்கவே முடியாது. தேர்தல் தொகுதிகளை நிரப்பும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? என்ற கேள்விக்கு முழுமையான பதில்கள் கிடைக்குமா? என்பது சந்தேகமே! மலேசிய இந்தியர்களைத் தேர்தலின் வழி பிரதிநிதிப்பவர்கள் கட்சியின் பதவிகளை அலங்கரித்திருப்பது முக்கியக் கூறாக கொண்டதன் விளைவினை நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமையாக பிரதிபலித்ததை இன்னமும் உணராமல் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வருவதை நண்பன் குழுவால் உணர முடிகின்றது. தேர்தல் வேட்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக நான்கு ஆண்டுகள் தனிமையில் கடுமையான தவத்தினை மேற்கொண்டு தற்போது களம் கண்டிருக்கும் திடீர் மக்கள் சேவையாளர்களை நண்பன் குழுவால் அடையாளம் காட்ட முடியும். இதுவரையிலும் மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்திருக்கும் ம.இ. கா.வின் தேர்தல் வேட்பாளர்கள் மலேசிய இந்தியர்களின் நலனுக்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட முடியுமா? ம.இ.கா.வின் தேசியத் தலைவரின் ஆசியைப் பெறுவதற்கான களத்தில் தொகுதியில் இந்தியர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படலாமா? கோலாலம்பூரில் உள்ள ஒரு வரை ஈப்போவில் வேட்பாளராக நிறுத்துவது சரியா? கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ம.இ.கா.வின் வேட்பாளர்கள் இந்தியர் விவகாரங்ளுக்குத் தீர்வு கண்ட விவரங்களை தர முடியுமா? வான் குடை வேட்பாளர்களாகக் களம் காண்பதற்கு வியூகம் அமைத்திருக்கும் வேட்பாளர்கள் தொகுதி மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளனரா? போன்ற விவரங்கள் தேவையற்றதாகவே மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரநிதிதித்துவத்தின் தலைமைத்துவம் கருதுவதாக நண்பன் குழு கருதுகின்றது. நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தல் நாளிலிருந்து இன்று வரை மலேசிய இந்தியர்களின் விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்ட விவரங்களை அரசாங்க சார்புகட்சி, எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள் பொதுமக்களுக்குக் காட்ட முடியுமா என்ற கேள்விக்கு பதில் வருகின்றதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img