மலேசியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு நாடும்போது கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதேவேளையில் மருத்துவமனையின் வார்டுகளில் அனுமதித்தல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் 130 முதல் 230 விழுக்காடு வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சுகாதார அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ முகமட் ஷாபிக் அப்துல்லா அறிவித்துள்ளார். இது மலேசியர் அல்லாதாருக்கான மருத்துவ உதவித் தொகையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அதன்படி அவர்கள் சிகிச்சைக்கு நாடும்போது முன்பு செலுத்திய வெ.600 வைப்புத் தொகையளவு தற்போது வெ.1,400 ஆகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கு வைப்புத் தொகையாக முன்பு வெ.1,200 செலுத்திய அவர்கள் தற்போது வெ.2,800 செலுத்த வேண்டும்.மருத்துவமனையில் இரண்டாம் வகுப்பில் தங்கி சிகிச்சை பெறு (உள்நோயாளி கள்) வதற்கான வைப்புத் தொகை வெ.900த்திலிருந்து வெ.3,000 மாகவும் அறுவை சிகிச்சைக்கு வெ.1,500லிருந்து வெ.5000 மாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அச்சிகிச்சையை முதல் வகுப்பில் தங்கி பெறுவதற்கான வைப்புத் தொகை முறையே வெ.2,100 தற்போது வெ.7,000 மாகவும் வெ.3,300 தற்போது வெ. 11,000மாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட வைப்புத் தொகை அதிகரிப்பு நிரந்தரவாசி (பிஆர்) தகுதியுடையவர்களைத் தவிர மற்ற சிறார்கள், வயது வந்தோருக்கு பொருந்தும். அவர்கள் சிகிச்சை கட்டணங்களை செலுத்திய பிறகே மருந்துகளைப் பெற முடியும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்