மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்த சமீரா கிருஷ்ணன் (வயது 26) என்ற திருநங்கையின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஐந்து சகோ தரர்களில் இருவர் ஏற்கெனவே சமீராவின் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்த கடத்தல் வழக்கில் சமீரா முக்கிய சாட்சியாக இருப்பதால் அவர், நீதிமன்றத்தில் உண்மையை சொல்வாரேயானால் தங்கள் கழுத்தில் தூக்கு கயிறுதான் என்பதை உணர்ந்த சம்பந்தப்பட்ட நபர்கள், சமீரா நீதிமன்ற வாசலை மிதிப்பதற்கு முன்னதாகவே அவரின் கதையை முடித்து விட வேண்டும் என்று எண்ணியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சமீரா படுகொலை தொடர்பில் நான்கு தினங்களுக்கு முன்பு போலீசார் கிள்ளான், தாமான் எங் ஆனிலுள்ள ஐந்து சகோதரர்களை கைது செய்துள்ளது. அந்த ஐவரும் அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர். சமீரா குவாந்தானில் தாம் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டதால் அந்த கொலை குறித்து குவாந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு ஏதுவாக அந்த ஐவரும் குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமைய கத்தில் வைக்கப்பட்டுள்ளனர். சமீராவின் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவதற்காக 19 வயது முதல் 30 வயதுடைய அந்த ஐந்து சகோதரர்களும் குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு 7 நாள் காவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த ஐவருக்கும் ஏற்கெனவே குற்றப் பதி வுகள் உள்ளன. எனினும் இவர்களில் இருவர் கடந்த ஆண்டு சமீரா கடத்திச் செல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில், ஒரு பூக்கடை ஊழியரான சமீரா குவாந்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் பலமுறை வெட்டப்பட்டதோடு துப்பாக்கியால் சுடப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கிள்ளானில் சமீரா கடத்தப்பட்டு, சுங்கை ராசா டோல் சாவடியில் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடத்தல் வழக்கில் சமீராதான் தனது கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சி ஆவார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் போது கடுமையான சித்திரவதை கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட சமீரா, டோல் சாவடி அருகில் கார் ஒன்றின் பின் இருக்கைக்கு கீழே கட்டிப் போடப்பட்டிருந்ததை ஒரு வாகனமோட்டி பார்த்து போலீசுக்குத் தகவல் கொடுத்தார். அவரின் மார்பு காம்புகள் பிளையர் கொண்டு திருகப்பட்டு இருந்தன. கால் கூரிய முள்வேலி கம்பிகளை கொண்டு கட்டப்பட்டு இருந்தன. போத்தலை கொண்டு அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருந்தார். அப்போது சமீரா போலீசாரால் மீட்கப்பட்டதோடு, இது தொடர்பில் அந்த இரண்டு நபர் களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் ஆள்கடத்தல் சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் இவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இதில் அந்த இருவரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கச் சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்