பெரும் சர்ச்சைக்கு இடமாக எழுந்துள்ள பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தண்டனைகளை அதிகரிக்கச் செய் யும் ஷரியா நீதிமன்ற சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதலை முதலில் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டநிபுணரும் கூட் டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் நேற்று வாதிட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆட்சியாளர்கள்தான் இஸ்லாம் சமயத்தின் தலைவர்கள். எனவே இஸ்லாமிய நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்புடைய விவகாரங்கள் என்று வரும் போது முதலில் ஆட்சியாளர்களின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். தண்டனைகளை அதிகரிக்கச் செய்வது என்பது இஸ்லாமிய சட்ட நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும் என்றார் கோபால் ஸ்ரீராம். ஹாடி அவாங் நாடாளு மன்றத்தில் தனிப்பட்ட முறையில் 1965 ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்றங்களுக்கான குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை (சட்டம் 355) தாக்கல் செய் வதற்கும், அது தொடர்பாக விவாதம் செய்வதற்கும் முன்னதாக ஆட்சியாளர்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் கோபால் ஸ்ரீ ராம் மேற்கண்டவாறு கூறினார். ஷரியா நீதிமன்றங்களில் தண்டனையை அதிகரிக்க செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கிற்கு சபா நாயகர் அனுமதி அளித்தார். ஆனால், அதன் மீதான விவாதம் ஒத்திவைக்கப் பட்டது. அந்த சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதலின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அது தொடர்பாக விவாதம் நடத்துவதற்கும் சட்டத்தில் இடமில்லை. அது அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று அந்த மூத்த வழக்கறிஞர் மிகத் தெளிவாக குறிப்பிட்டார். இதற்கு முன்பு இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆட்சியாளர்களின் அனுமதியைப் பெறுவதில் தோல்விகண்ட அரசாங்கம், குறுக்கு வழியில் எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. குற்றம் என்றால் குற்றம்தான் என்றார் கோபால் ஸ்ரீ ராம். ஷரியா குற்றவியல் சட்டத்திருத்தத்தில் குற்றம் இழைக்கின்றவர்களுக்கு நடப்பு தண்டனையைவிட கூடுதலாக 30 ஆண்டு சிறைத்தண்டனை, 100 பிரம்படித் தண்டனை, ஒரு லட்சம் வெள்ளி அபராதம் என தண்டனையை அதிகரிக்கச் செய்ய அந்த சட்டத்திருத்த மசோதாவை பாஸ் கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 1965 ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்றங்களுக்கான குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 355) கீழ் நடப்புத் தண்டனையாக 3 ஆண்டு சிறைத்தண்டனை, 5 ஆயிரம் வெள்ளி அபராதம் ஆகியவை மட்டுமே விதிக்க வகை செய்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு கிளந்தான் மாநில ஷரியா குற்றவியல் சட்டத் திருத்த மசோதா அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அங்கீரிக்கப்பட்டதுகூட அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்றார் கோபால் ஸ்ரீ ராம். மேலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்பது மாநிலத்தின் அதிகாரத்தின் கீழ் அல்ல என்பதையும் அந்த முன்னாள் நீதிபதி விளக்கினார். குற்றவியல் சட்ட தண்டனைகளை விதிப்பதற்கு மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. குற்றத்தை நிர்ணயிப்பது மற்றும் தண்டனைக்கான அளவுக்கோல் என்ன என்பதை அளவிடும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. விவகாரத்து மற்றும் வாரிசுதாரர் போன்ற விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்க மாநில அரசாங்கத்திற்கு உரிமை உண்டே தவிர குற்றவியல் சட் டங்களுக்கு அல்ல என்பதையும் அவர் விளக்கினார். இதன் தொடர்பில் கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் 4(3) மற்றும் 4(4) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாநில சட்டத்திருத்தை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றதில் வழக்கு தொடுக்குமாறு கோபால் ஸ்ரீ ராம் மக்களை கேட்டுக்கொண்டார். ஒரு நேர்க்கோட்டில் குற்றவியல் தன்மையிலான இரு சட்டங்கள் நிச்சயம் இரண்டு இருக்க முடியாது. அந்த சர்ச்சைக்குரிய சட்டம் 355 பிரிவு குறித்து மக்கள் தங்கள் அச்சத்தை தெரிவிக்க உரிமை உண்டு என்பதையும் அவர் விளக்கினார். நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதாவை ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்களின் கோரிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்