img
img

கபாலி 2! படப்பிடிப்பு ஆரம்பம்?
சனி 08 ஏப்ரல் 2017 14:15:21

img

உலகம் முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய் யும் வகையில் கபாலி திரைப்படத்தின் தொடர்ச்சியை திரைப் படமாக்கும் கனவை நனவாக்க சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முழுமையாக ஒத்துழைக்க தயார் என அத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் கூறியுள்ளார். நடப்பில், கபாலி தொடர்ச்சி திரைப்படத்திற்கான வசனங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், அத்திரைப்பட படபிடிப்பு இவ்வாண்டில் தொடங் கப்படக் கூடும் எனவும் அவர் கூறினார். கபாலியின் 2 ஆம் பாக படப்பிடிப்பில் அதன் இயக்குனர் ரஞ்சித்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கப்படும் என்றாரவர். கபாலி 2 இன் படபிடிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுவதை தமது தரப்பு உறுதிப்படுத்தும் என மாலிக் கூறினார். அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், அப்பயணத்தின் ஓர் அங்கமாக ரஜினிகாந்தை நேரில் சென்று கண்டார். கபாலி திரைப்படத்தின் தொடர்ச்சியை மலேசியாவில் படமாக்க அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்திய திரைப்படத் துறை யினர் மலேசியாவில் படப்பிடிப்பு மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவது நாட்டின் திரைப்படத் துறை வளர்ச்சிக்கு வித்திடும் என மாலிக் குறிப்பிட்டார். கடந்தாண்டு ஜூலை மாதம் திரையீடு கண்ட கபாலி இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றாலும் அது மிகை இல்லைதான். ரஜினியின் 159 ஆவது திரைப்படமான கபாலி கோலாலம்பூர், மலாக்கா, கேரித் தீவு, பந்திங், பேங்கோக், ஹோங்கோங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. மலேசிய, இந்திய, ஹாங்காங் நட்சத்திரங்கள் நடித்திருந்த கபாலி 388 மில்லியன் ரிங்கிட் வசூலைக் குவித்தது. மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ரோஸ்ஹாம் நூர், நோர்மான் ஹக்கீம், ஜேக் தைப்பான், டோனி காசீம் உள்ளிட்ட பலர் கபாலியில் நடித்திருந்தனர். அப் படம் மலாய் மொழி உட்பட பன் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இப்படியாக, பல பல சிறப்பு கூறுகளை உள்ளடக்கிய கபாலி திரைப்படத்தின் தொடர்ச்சி - 2 ஆம் பாகம் தயாராக விருப்பதாக அண்மையில் தகவல் கசிந்தது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img