கேனாபிஸ் வகை போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக உயர்கல்வி நிலையத்தில் படிக்கும் 4 மாணவர்கள் நேற்று இங்குள்ள மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். கடந்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் ஜாலான் பெலாண்டூக் பூத்தே அடுக்ககத்தில் 0.16 கிராம் கேனாபிஸ் வகை போதைப் பொருள் வைத்திருந்ததாக நூருல் அமிரா அப்துல்லா (23), இமான் பட்ரிசியா சம்சூல்கமார் (21), அகமட் யாசீர் பாஹி ரின் (21), முகமட் அல் அமீன் அப்துல் அஜிஸ் (21) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், அவர்கள் நால்வரும் குற்றத்தை மறுத்துள்ளனர். அந்த நால்வருக்கும் ஜாமின் தொகை வெ.3,000ஆக நிர்ணயிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் முகமட் அஸ்ரி ஜக்காரியா பரிந்துரைத்தார். இருப்பினும், அந்த நால்வரும் இன்னும் உயர்கல்வி நிலையத்தில் கல்வி கற்பதால் அவர்களின் ஜாமின் தொகையைக் குறைக்கும்படி எதிர் தரப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் தஞ்சோங் துவான் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி நோரினா மலூடின் ஜாமின் தொகையை வெ.1,700க்குக் குறைத்த தோடு வழக்கை மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்