கெடா ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் அப்துல் ஹலிம் மு'அட்ஸாம் ஷா, உடல் நலமின்றி இருப்பதாக வாட்ஸ் அப், முக நூல் ஆகியவற்றில் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை அவரின் முதன்மை தனிப்பட்ட செயலாளர் நேற்று நிராகரித்தார். கெடா மாநில இஸ்லாமிய சமய விவகார இலாகாவால் வெளியிடப்பட்ட ஒரு சாதாரண கடிதத்தை பொறுப்பற்ற நபர்கள் தவறாக புரிந்துகொண்டு வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி வருவதாக சைட் உனான் மஷ்ரிசைட் அப்துல்லா கூறினார். சுல்தான் நலமுடன் இருக்கிறார். சுமார் 90 வயதாகிவிட்ட அவரால் முன்புபோல் ஆற்ற லுடன் செயல்படாமல் இருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.இருப்பினும் அவர் 2017ஆம் ஆண்டு லங்காவி அனைத்துலக கடல் மற்றும் விண்வெளி கண்காட் சிக்கு (லிமா 17) வருகை புரிந்ததுடன் மஸ்ஜிட் பாடாங் லாலாங் லங்காவியையும் திறந்து வைத்ததாக தனிப்பட்ட செயலாளர் வாட்ஸ் அப் வழி பெர்னாமாவிடம் கூறினார். வெள்ளிக்கிழமை தொழுகைக் குப் பின்னர் சோலாட் ஹாஜாட் பிரார்த்தனை செய்யுமாறு இமாம் களுக்கு தெரிவிக்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரி களுக்கும் உத்தரவிடும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் பரவ தொடங்கின. கெடா சுல்தான் உடல் நலத்துடன் இருப்பதற்காக அவ்வப்போது இந்த இலாகாவால் இம்மாதிரியான கடிதங்கள் அனுப்பப்படுவது வழக்கம் என சைட் உனான் மஷ்ரி விளக்க மளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்