எஸ்பிஎம் மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவும் வண்ணம் சிலாங்கூர் மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இணையதளத்தின் வழி எஸ்பிஎம் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். இத்திட்டத்தில் பங்கு பெற மாணவர்கள் selangorfreetuition.com&CÀ என்ற அகப்பக்கத்தில் பதிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிந்து கொண்டு, வகுப்புகளைத் தொடர்ந்த மாணவர்களில், இந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெறும் முதல் 5 மாணவர்களுக்கு, வெ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று இத்திட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் அறவாரியம் ஏற்று நடத்தும் இத்திட்டத்தின் வழி சுமார் 18 ஆயிரம் எஸ்பிஎம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மொழி, அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் புலமை பெறவேண்டும் என்ற கல்வி அமைச்சின் கொள்கை இதன்வழி நிறை வேற் றப்படும் என்று சிலாங்கூர் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி ஸாஹூரா ஸக்ரி கூறினார். தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்தினை காணொளி வழியாக மாணவர்கள் மீள்பார்வை செய்து கொள்ளலாம். குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்க ளின் பிள்ளைகளுக்கென உருவாக்கப்பட்ட இந்த பிரத்தியேக வகுப்பிற்கு மாணவர்கள் முதலில் இணையத்தில் பதிவுசெய்து கொண்ட பிறகு பாடங் களைப் படிக்கத் தொடரலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்