கடந்த பிப்ரவரி 23இல் படுகொலை செய்யப்பட்ட சமீராவின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 5 சகோதரர்கள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள் ளனர். 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த சகோதரர்கள் Taman Eng Ann in Klang இல் உள்ள அவர்கள் இல்லத்தில் வைத்து கைது செய்யப் பட்டனர். குவாந்தானில் ஷமீரா கிருஷ்ணன் என்ற திருநங்கை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மலேசியாவையே பரபரப்பாக்கியி ருந்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் முள்வேலி கம்பிகளால் கைகால்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இரு இந்திய இளைஞர்களுக்கு எதிரான முக்கியமான சாட்சியாக ஷமீரா இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அந்த கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு செவி மடுப்பு அடுத்த வாரம் ஷா ஆலமில் நடைபெறவிருந்த நிலையில், பிப்ரவரி 23 இல் ஷமீரா கிருஷ் ணன் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.26 வயதான ஷமீராவைக் கடத்திய பி.கணேசன் மற்றும் எஸ். விக்னேஸ்வரன் ஆகிய இருவரும், செக்ஷன் 3 (1) கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப் பிடத்தக்கது. ஷமீரா கிருஷ்ணன் அதிகாலையில் உணவு வாங்குவ தற்காக குவாந்தான், ஜாலான் பாசார் அருகே சென்ற போது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டும், கை விரல்கள் துண்டிக்கப்பட்டும், தலையில் பலத்த காயங்களுடனும் இறந்து கிடப் பது கண்டுபிடிக்கப்பட்டது. மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஷமீரா உடல் அவர் பிறந்த தினத்தில் பகாங், காராக்கில் தகனம் செய் யப்பட்டது. ஷமீரா குவாந்தானில் ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். ஷமீராவின் இழப்பு, திரு நங்கை சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்