எங்களின் விமானப் பணிப் பெண் வேலை நேர்காணலுக்கு வருகிறவர்கள் ஆடைகளைக் களைய வேண்டிய அவசியம் இல்லை அதனால் நீங்கள் தைரி யமாக நேர்காணலுக்கு வரலாம் என ஏர் ஏசியா நிறுவனம் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மலிண்டோ ஏர், விமான நிறுவனம் தனது விமானப் பணிப்பெண் நேர்காணலுக்கு வந்தவர்களை ஆடைகளைக் களையும்படி கேட்டுக்கொண் டதை மறைமுகமாக தாக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. மலிண்டோ ஏர், விமானப் பணிப்பெண்கள் உடம்பில் பச் சைக் குத்துவதையும் தழும்புகள் இருப்பதையும் ஆதரிப்பதில்லை. அதனால்தான் இந்த நேர்காண லின் போது அவர்கள் ஆடைகளை களையும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என மலிண்டோ ஏர் ஓர் அறிக்கை கூறியது பெரும் சர்ச்சையை ஏற் படுத் தியது. அந்த விமான நிறுவனம் பகிரங் கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தச் சர்ச்சை இன்னும் தீராத நிலையில், ஏர் ஏசியா வெளியிட்ட இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் ஆசியாவின் தைரியத்தை சிலர் பாராட்டிய வண்ணம் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்நிறுவனத்தின் இந்த விளம்பர யுத்தியை பலர் வெகுவாக பாராட்டுகின்றனர். குறைந்த விலை விமான நிறுவனங்களான ஏர் ஆசியாவிற்கும் மாலிண்டோ ஏருக்கும் இடை யிலான மறைமுக போட்டி இந்த விளம் பரத்தின் மூலம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்