img
img

சபாநாயகர் பண்டிகார் ஒரு கோழை!
வெள்ளி 07 ஏப்ரல் 2017 14:32:24

img

நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கொண்டு வந்த தனிப்பட்ட முறையிலான 1965 ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்றங்களுக்கான குற்றவியல் சட்டத்திருத்த மசோதா (சட்டம் 355) மீது விவாதம் நடத்த விடாமல் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்து இருக்கும் சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா ஒரு கோழை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கடுமையாக சாடினர். நேற்று வியாழக்கிழமையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடையும் நிலையில் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங்கினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தில் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா, விவாதத்திற்கு விடா மலேயே பண்டிகார் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விடுவார் என்று முன்பே ஆரூடம் கூறப்பட்டு வந்தது. அந்த ஆரூடம் போலவே அந்த சட்ட மசோதா குறித்து எதிர்க்கட்சியினர் விவாதம் செய்ய விடாமல் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சபா நாயகர் பண் டிகார் ஒத்திவைத்து விட்டார் என்று ஷா ஆலம், அமானா கட்சி எம்.பி. காலிட் சாடினார். அவர் ஒரு கோழை. அதனால்தான் அந்த சர்ச்சைக்குரிய சட் டத்திருத்தத்தை விவாதிக்க அனுமதிக்கவில்லை என்றார். ஹூடுட் தன்மையிலான அந்த ஷரியா நீதிமன்ற குற்றவியல் சட்டம், நடப்பு தண்டனை முறையை அதிகரிக்கிறது. அச்சட்டத்தின் கீழ் குற்றம் புரி கின்றவர்களுக்கு 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. பிரம்படித் தண்டனையை 100 ஆக அதிகரிக்கிறது. அபராதத்தை ஒரு லட் சம் வெள்ளியாக அதிகரிக்க வகை செய்கிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் இது போன்ற சட்டமுறைக்கு பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சிகளும் முழு வீச்சாக எதிர்த்து வருகின்றன.இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுமானால் தேசிய முன்னணியிலிருந்து தாங்கள் விலக கூடும் என்று ம.சீ.ச. மிரட்டத் தொடங்கியது முதல் இந்த சட்டத்திருத்தத்தை தாங்கள் தாக்கல் செய்வதாக அறிவித்த அம்னோ, பின்னர் பின்வாங்கியது. எனினும் திட்டமிட்டப்படி நேற்று காலையில் அந்த சட்டத்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியின் செயலாளர் தகியுடின் ஹசான் உரை யாற்றுவதற்கு சபா நாயகர் பண்டிகார் அனுமதி அளித்தார். அவருக்கு கிட்டத்தட்ட 90 நிமிடம் அனுமதி வழங்கினார். தகியுடின் உரையாற்றிய பின்னர் அது குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் முனைந்த போது, சபா நாயகர் திடீரென்று தலையிட்டு விவாதம் நடத்த அனுமதி இல்லை என்றார். சபாநாயகரின் இந்த ஒரு தலைபட்ச செயலை பண்டான் பி.கே.ஆர். எம்.பி. ரபிஸி ரம்லி கண்டித்தார். ஒரு தரப்புக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து விட்டு மறு தரப்பினர் வாதத்தை கேட்க அனுமதி வழங்காதது நியாயமில்லை என்றார். எங்களை இடைநீக்கம் செய்வதாக இருந்தால் செய்யுங்கள். எதிர்க் கட்சியின் கருத்தை கேட்டறியாதது எந்த வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல என்றார். அப்போது தலையிட்ட சபா நாயகர் பண்டிகார், ஆங்கிலத்தில் ஒரு உவமையை சொல்வார். “If you have power, you are powerful; if you don’t use your power, you are bloody fool. உங்களிடம் அதிகாரம் இருக்குமானால் நீங்களே அதிகாரம் கொண்டவர். உங்கள் அதிகாரத்தை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள்தான் படுமுட்டாள். அந்த உவமைக்கு இலக்கணமானவன் நான். நாடாளுமன்ற நடைமுறைகளில் எனக்கே உச்ச அதிகாரம். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றக்கூட்டத் தொடரை அடுத்த ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கிறேன் என்று கூறி, இருக்கையை விட்டு சட்டென்று எழுந்து பண்டிகார் சென்று விட்டார். அப்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து பண்டிகார் ஒரு கோழை என்றனர். பெட்டாலிங் ஜெயா ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, பண்டிகார் ஒரு கோழி (Ayam) என்றார். செர்டாங் ஜ.செ.க. எம்.பி. ஓங் கியான் மிங், பண்டிகார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img