போலியான ஆவணங்களை பயன்படுத்தி வடிகால் நீர்ப்பாசன இலாகாவிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி கோரியது தொடர்பில் ஜொகூர் மாநில பிரபல குத்தகையாளரும் மஇகாவின் முன்னாள் உதவித் தலைவருமான டான்ஸ்ரீ எஸ். பாலகிருஷ்ணன் (வயது 63) உட்பட அறுவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.ஏ.சி.) நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றது. டான்ஸ்ரீ கே.பாலகிருஷ்ணன் நிறுவனத்தில் பணியாற்றிய அவரின் மகன், வடிகால் நீர்ப்பாசன இலாகாவைச் (டி.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இந்த அறுவரில் அடங்குவர். கடந்த புதன்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ கே.பாலகிருஷ்ணன் ஜொகூர் பாருவில் உள்ள அவரின் இல்லத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்று காலை 9.30 மணிக்கு டான்ஸ்ரீ கே.பாலகிருஷ்ணன் உட்பட அறுவர் புத்ரா ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப் பட்டனர். எம்.ஏ.ஏ.சி.யின் தடுப்புக் காவலுக்குரிய மஞ்சள் நிற சட்டையை அறுவரும் அணிந்திருந்தனர். கையில் விலங்கிடப்பட்ட நிலையில் அதிகாரி களால் கொண்டு வரப்பட்ட அவர்கள், நீதிமன்ற கட்டடத்தை நெருங்கியதும் முகத்தை தங்கள் சட்டையால் மறைத்துக் கொண்டனர். டான்ஸ்ரீ கே.பாலகிருஷ்ணனும் இதர ஐவரும் மாஜிஸ்திரேட் ஏ. அகிருடீன் என்ற பாய் அச்சோ முன்னிலையில் ஆஜரப்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக அந்த அறுவரையும் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரையில் தடுப்புக் காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிராசிகியூஷன் அதிகாரி, நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். அறுவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தில் 18 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். மஇகா வட்டாரத்தில் பிரபலமான தலைவராக விளங்கிய டான்ஸ்ரீ கே.பாலகிருஷ்ணன், கடந்த 2012 ஆம் ஆண்டு வடிகால் நீர்ப்பாசன இலாகாவின் கால் வாய் சீரமைப்புப் பணிக்காக 350 ஜியோடியூப் விநியோகத்திற்காக ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளியை கோரியதாக கூறப்படுகிறது. எனினும் அவர் அந்த இலாகாவிற்கு விநியோகம் செய்தது 40 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள 89 ஜியோடியூப் யூனிட்டுகள்தான் என்பது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது. அவருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டில் வடிகால் நீர்ப்பாசன இலாகாவின் நான்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்