1976ஆம் ஆண்டு சட்டச் சீர்திருத்தம் (திருமணம், விவாகரத்து) சட்டத் திருத்த நடவடிக்கையை ஒத்தி வைக்கும் முடிவையடுத்து தனக்கு தெரியாமல் தங்களின் மூன்று பிள்ளைகளை இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றிய தன் கணவருக்கு எதி ராக 8 ஆண் டுகளாக சட்டப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள எம்.இந்திராகாந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். அம்மசோதா நேற்று மக்களவையில் இரண்டாம் வாசிப்பிற்கு தாக்கல் செய்ய ஏதுவாக பட்டியலிடப்பட்டிருந்தது.அம்மசோதா முதன் முதலில் 2016, நவம் பர் 21இல் மக்களவை யில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மசோதாவை விரிவாக ஆராய வேண்டும். அதனால் அது நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக் கல் செய்யப்பட மாட்டாது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். அம்மசோதா ஒத்தி வைக்கப்பட்டதால் மிகவும் வருத்தமடைகிறேன். நீதி பெறும் வகையில் எட்டாண்டுகளாக காத்திருக்கிறேன். அம்மசோதா தாக்கல் செய் யப்படும் என உறுதியளித்தனர். தற்போது தன் பிள்ளைகளின் சமயம் எதுவென உறுதியில்லா நிலை உள்ளது. எனக்கு எப்போது நீதி கிடைக்கும் என அவர் மக்களவையில் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்