அந்நியத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதற்கு முதலாளிகள் அனைவரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று கூறினார். வெளி நாடுகளைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கான விண்ணப்பங் கள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் கூறினார். வேலை வாய்ப்பு முகவர்களால் முதலாளிகள் ஏமாற்றப்படாததையும் கூடுதல் தொகை செலுத்துவதையும் உறுதிப்படுத்தவும், அந்நியத் தொழிலாளர்களை முகவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். கட்டாய ஆன்லைன் விண்ணப்பம் மீதான முடிவு, அனைவரின் நலன் கருதியும் எடுக்கப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவுத் துறை மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடராமல் இருப்பதற்கு இது வழி வகுக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில கலந்துகொண்ட பின்னர் அவர் இதை தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்