பணிப்பெண் வேலைக்காக நேர்காணலுக்கு வரும் பெண்களை மேலாடையை அகற்றும்படி கோரும் மலிண்டோ ஏர் நிறுவனத்தின் நடைமுறை ஒரு குற்றச் செயலாகும் என்று மலேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (எம்டியூசி) கூறிற்று. இம்மாதிரியான நடைமுறை உறுதிப்படுத்தப்பட்டால், இது ஒரு பாலியல் துஷ்பிரயோகமாகும். ஒரு குற்றச்செயலுக்கு ஒப்பாகும். இந்த விவகாரத்தில் போலீசாரின் தலையீடு உடனடியாக தேவைப்படுகிறது என்று எம்டியூசி பொதுச் செயலாளர் ஜே.சோலமன் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார். இது ஒரு தனியுரிமை மீறலாகும். சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமை களையும் மீறும் ஒரு செயலாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பணியாளருக்கும் அவரவருக்குரிய மதிப்பும் மரியா தையும் வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்கள் இப்பணிக்கு வருவது வெறும் ஆர்வம் மட்டும் காரணமல்ல. இது அவர்களது கனவாகும். எனவே, நேர்காணலுக்கு வரும் பெண்களை ஆபாச மாகவும் அருவருப்பாகவும் நடத்தக் கூடாது. ஆனால், மலிண்டோ ஏர் நிறுவனத்தின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்