(சிப்பாங்) பள்ளிக்குச் சென்ற தமது மகன் நான்கு நாட்களாகியும் வீடு திரும்பாதது தொடர்பில் அதிர்ச்சியில் உறைந்திருந்த குடும்பத்தினர் நேற்று இரவு இன்ப அதிர்ச்சியில் மிதந்தனர். இங்குள்ள சுங்கை பீலேக் இடை நிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயிலும் மாணவர் விக்னேஸ் ராவ் த/பெ வாசகம் வயது (14) என்பவர் இம்மாதம் ஏப். 3ஆம் தேதியன்று நண்பகல் 12.40 மணியளவில் எண்.48 தாமான் ஸ்ரீ மெர்பாவ், சுங்கை பீலேக் எனும் தமது இல்லத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் நான்கு நாட்களாகிவிட்ட நிலையில் வீடு திரும்பவில்லை என தந்தை வாசகம் என்பவர் இங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்ததுடன் இச்செய்தி நேற்றைய மலேசிய நண்பன் நாளேட்டிலும் வெளியிடப் பட்டிருந்தது. தன்மகன் கிடைத்த தகவல் குறித்து மலேசிய நண்பனிடம் தொடர்பு கொண்டு விளக்கமளித்த அவர், நான் நேற்று இரவு கிள்ளானில் உள்ள என் தமக் கையை தொடர்பு கொண்டு மகன் விக்னேஸ்வரன் காணாதது தொடர்பாக விவரித்தேன். அப்போது எனக்கு ஒரு ஆலோசனை தோன்றியது. அதன்படி உடனடியாக கிள்ளான் மருத்துவமனைக்குச் சென்று ஒருதடவை பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் நள்ளிரவு 12.00 மணியளவில் மருத்து வமனைக்குச் சென்று அங்கு விசாரித்தபோது அங்குள்ள அவசரப் பிரிவு பகுதியில் சோர்வுற்ற நிலையில் அமர்ந்திருந்த விக்னேஸ்வரனை கண்டதாக அவர் தகவல் தெரிவித்தார் என்றார். இதுதொடர்பாக மேலதிக தகவல்களை வழங்க வாசகம் மறுத்துவிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்