வடக்கு, தெற்கு நெடுஞ்சாலையின் 96.2ஆவது கிலோ மீட்டரில் நான்கு பள்ளி மாணவர்கள் வாகனங்களை நோக்கி கற்களை வீசியதாக அவர்களை நெடுஞ்சாலை வாரிய ரோந்து அதிகாரிகள் கைது செய்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஷுக்கிர் முகமட் இசா கூறினார். நெடுஞ்சாலையில் கார்களை நோக்கி சில ஆடவர்கள் கற்களை வீசுவதாக வாகனமோட்டிகள் நெடுஞ்சாலை வாரிய ரோந்து பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன் நெடுஞ்சாலை ரோந்து பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந் தனர். வடக்கு, தெற்கு நெடுஞ்சாலையின் 96.2ஆவது கிலோ மீட்டரில் ஒரு மேம்பாலத்திற்கு கீழே அந்த நான்கு ஆடவர்கள் வாகனங்களை நோக்கி கற் களை வீசுவதை கண்டதாக அவர் சொன்னார். உடனே அந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து கோலமூடா மாவட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக ஏசிபி முகமட் ஹுக்கிர் தெரிவித்தார். இந்த நான்கு ஆடவர்களும் 14 வயதுடைய பள்ளி மாணவர்கள் என்றும் இவர்களை குற்றவியல் பிரிவு 427 இன் கீழ் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். தங்கள் கார்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை யாரிடமிருந்தும் புகார்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்