பள்ளிக்குச் சென்ற தன் மகன் நான்கு நாட்களாகியும் இன்றுவரை வீடு திரும்பாதது தொடர்பில் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இங்குள்ள சுங்கை பீலேக் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயிலும் மாணவர் விக்னேஸ் ராவ் த/பெ வாசகம் வயது (14) இம்மாதம் ஏப். 3ஆம் தேதியன்று மதியம் 12.40 மணியளவில் எண்.48 தாமான் ஸ்ரீ மெர்பாவ், சுங்கை பீலேக் எனும் தமது இல்லத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் நான்கு நாட்களாகி விட்ட நிலையில் இன்றுவரை வீடு திரும்பவில்லை என தந்தை வாசகம் குறிப்பிட்டார். பள்ளிச் சீருடையுடன் வெளியேறிய மாநிறம் கொண்ட அவர் 169 செ.மீட்டர் உயரத்தை கொண்டிருப்பதுடன் தலைமுடி நேராகவும் கட்டையாகவும் வைத்திருப்பார் என தந்தை வாசகம் தமது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். காணாமல்போன தன் மகனை காண்பவர்கள் 012-9735261 என்ற எண் ணிலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் வழங்கி உதவுமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்