கடந்த வியாழக்கிழமை இங்குள்ள பொது பல்கலைக்கழக தங்கும் விடுதியின் கழிப்பறையிலிருந்து ஆண் சிசு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக் கழக மாணவியின் காதலனை போலீசார் ஜித்ராவில் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 20 வயதுடைய மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிசுவின் உடலை பரிசோதனை செய்ததில், அந்த சிசு பிறக்கும்போது உயிருடன்தான் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.ஆகையால் சிசு இறந்ததற்கான காரணத்தை கண்டறிய இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற் கொள்ள அந்த மாணவியின் 19 வயது காதலனையும் கைது செய்துள்ளதாக கெடா மாநில குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ முகமட் நசிர் யா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாணவி 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இங்குள்ள பொது பல்கலைக்கழகத்தில் சிசுவின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் ஜித்ரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை தொடர்ந்து வருவதாக முகமட் நசிர் யா தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்