சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸுக்கும் தனக்கும் இடையே நடைபெறவுள்ள பொது விவாதத்தை நடத்துவதற்கு கெடுபிடி யாக நடந்து கொள்ளும் போலீசாரை துன் டாக்டர் மகாதீர் முகமட் வன்மையாகச் சாடியுள்ளார்.இந்த பொது விவாதத்திற்கு அமைச்சர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.மாறாக, போலீசார் மட்டுமே அதிக கெடுபிடியைக் காட்டி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமரான துன் மகாதீர் குற்றம் சாட்டினார். அதுவும் மாவட்ட அளவிலுள்ள போலீஸ் தலைவர்களே அதிக கெடுபிடி கொடுத்து வருகின்றனர். பள்ளிகளைப் பயன்படுத்தக் கூடாது, சண்டை வரும், ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என அவர்களே சொந்தமாக ஒரு காரணத்தைக் கூறி வருகின்றனர். இவை அனைத்துக்கும் போலீஸ் மட்டுமே காரணம். தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மாவட்ட போலீஸ் தலைவர்கள் தங்களின் அதிகாரத்தையும், கெடுபிடிகளையும் காட்டி வருகின்றனர் என்று அவர் சொன்னார். உள்துறை அமைச்சரையும் போலீஸ் அதிகாரிகள் மதிக்கவில்லை. மகாதீர் - நஸ்ரி இடையில் நடைபெறும் விவாதத்தில் தனக்கு எந்தவித ஆட்சேபனை யும் இல்லை என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் கூறி விட்டார். அவரே இந்த விவாதத்தை ஆதரிக்கிறார். ஆனால், கீழ்நிலை யிலுள்ள போலீஸ் அதிகாரிகளே நாட்டின் அதிகாரத்தை அவர்களின் கையில் எடுத்துக் கொண்டுள்ளது போல் உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பும், அமைச்சர்களும் ஜனநாயக முறையில் செயல்பட்டு மக்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க நினைக்கின்றனர். ஆனால், போலீ சார் இதற்கு தடையாக இருக்கின்றனர். உண்மையிலேயே போலீசார் மிகவும் திமிர் பிடித்தவர்கள்தான் என்றும் துன் மகாதீர் சாடினார். அரசாங்கத்தில் உள்ளவர்களே இந்த விவாதத்தை செவிமெடுப்பதற்கு அவ்வளவு ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதன் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆலோசனையை இன்னும் ஏற்கவில்லை என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்