வயது குறைந்தவர்களை பாலியல் பலாத்காரம் புரிவோர், அப்படி தங்களால் பாதிக்கப்பட்டவர்களை திருமணம் புரிந்து கொள்வது சிறந்த செயலாகும் என பரிந்துரைத்த ஓர் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது. அந்நபருக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதில் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். சாதாரண பெற்றோர் எவரும் தங்களின் மகளை பாலியல் பலாத்காரம் புரிந்தவனுக்கே திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். தங்கள் மகளின் வாழ்க்கையை சூறையாடிய ஒருவனை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள பெற்றோர்களால் இயலாது என்பதே உண்மை நிலை என்று கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார். எனினும், இம்மாதிரியான ஒரு திட்டத்திற்கு பெற்றோர் ஒப்புக் கொண்டால் மற்றவர்கள் சொல்வதற்கு ஏதுமில்லை என்று அவர் மேலும் கூறினார். ஆனால், அது என் மகளாக இருந்தால், நான் அதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று அவர் மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார். வயது குறைந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் புரிந்தவனையே மணம் புரிந்து கொள்வதில் தவறேதும் இல்லையென தாசேக் குளுகோர் அம்னோ நாடா ளுமன்ற உறுப்பினர் ஷாவுடின் யஹ்யா செவ்வாய்க்கிழமை இரவு மக்களவையில் கூறியிருந்தார். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் கற்பழித்தவனுக்கும் திருமணமாகிவிட்டால் அது சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு சாத்தியமான தீர்வாக அமையும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் தெரிவித்து இருந்தார். கற்பழிப்பு ஒரு கிரிமினல் குற்றம் என்று கூறிய அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் கற்பழிக்கப்பட்டவரை கற்பழித்தவர் திருமணம் செய்துகொள்வதைச் சட்டம் தடுக்கவில்லை என்றார். திருமணம் கற்பழிப்பு குற்றவாளியை நாளடைவில் திருந்தி நல்லவனாக வகைசெய்யும். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைத்தது பாக் கியமாகும் என்றார் அவர். திருமணம் அந்த மனிதனை ஒரு வேறொரு நல்வழிக்கு இட்டுச்செல்லும். கற்பழிக்கப்பட்ட அந்த மனைவி நிச்சயமற்ற எதிர் காலத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். எப்படியோ அந்தப் பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைத்தான் சமூகப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தீர்வு என்று அந்த தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாய்மலர்ந்தார். எனினும் அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த பரிந்துரை முட்டாள்தனமானது என்று எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இப்படியொரு சிந்தனை இவருக்கு எப்படி வந்தது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்