மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மேற்கொண்டு வரும் தொடர் அதிரடி நடவடிக்கைகளில் நேற்றுக் காலை ஜொகூர் மாநில டான்ஸ்ரீ ஒரு வர் சிக்கினார். அவர் ம.இ.கா வட்டாரத்தில் பிரபலமான ஒரு டான்ஸ்ரீயாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒரு குத்தகையாளராக விளங்கும் அந்த 63 வயது டான்ஸ்ரீ, வடிகால் நீர்ப்பாசன இலாகாவில் பெரும் குத்தகையைப் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. எனினும், கைது செய்யப்பட்ட அந்த டான்ஸ்ரீயின் அடையாளத்தை எம்.ஏ.சி.சி. வெளியிடவில்லை. அவர் நேற்றுக் காலை ஜொகூர்பாருவில் உள்ள அவ ரது இல்லத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்றை சீர்படுத்தும் வேலைக்காக ‘ஜியோடியூப்ஸ்’ எனும் ஒரு வகை குழாய்களை விநியோகம் செய்வதில் அவ்விலாகாவிற்கு போலி ஆவணங்களை காட்டி மோசடி புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எம்.ஏ.சி.சி. துணை ஆணையர் அஸாம் பாக்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வடக்கே ஊழல் குற்றத்திற்காக ஒரு டத்தோ கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு இந்த டான்ஸ்ரீ கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று காலை புத்ராஜெயா நீதிமன்றம் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, தொழில் அதிபர்களாகத் திகழும் பல்வேறு பிரமுகர்கள் எம்.ஏ.சி.சி.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி மாத தொடக்கத்தில் ஊழல் குற்றத்திற்காக கிராமப்புற வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளரும், அவரின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். பல கோடி வெள்ளி மதிப்புள்ள ரொக்கமும், தங்கப் பாளங்களும் அவரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு முன்பு, அரசாங்க சார்பு நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல்முறை அதிகாரி ஒருவர் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். அண்மையில், 70 வயது டத்தோ தொழில் அதிபர் ஒருவர் பினாங்கில் கைது செய்யப்பட்டார். மத்திய, மாநில அர சாங்கத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் இவர் இயக்குநர் பொறுப்பை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்