img
img

நேர்காணலுக்கு வரும் பெண்களை மேலாடை கழற்ற சொல்வதா?
வியாழன் 06 ஏப்ரல் 2017 12:20:33

img

பணி நிமித்தம் நேர்காணலுக்கு வரும் பெண்களை இடுப்புக்கு மேலே தங்கள் உள்ளாடைகள் தெரியும் வரை ஆடைகளைக் களையச் சொன்ன மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தின் செயலை இந்நாட்டில் உள்ள மகளிரும் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையாகச் சாடியுள்ளனர். இது ஒரு வெறுக்கத்தக்க, பெண்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாகும். நேர்காணலில் பெண்கள் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று மலிண்டோ காரணம் சொன்னாலும் இது மிகவும் மோசமான ஒரு நேர்காணல் முறையாகும் என்று அமானா கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூட் கூறினார். அவர்கள் (மலிண்டோ) என்ன காரணம் கூறப்போகிறார்கள்? நாங்கள் தோலை பார்க்க வேண்டும், அதில் பச்சை குத்தியிருக்கிறார்களா அல்லது வேறு எந்த காயங்கள், அடையாளங்கள் இருக்கின்றனவா என்றுதானே? எப்படி பார்த்தாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல் என்று அவர் கோபக் கன லுடன் தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு, மனித வள அமைச்சு ஆகியன இதுபோன்ற குப்பைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார் அவர் காட்டமாக. இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விவகாரத்தை விசாரணை செய்து, மலிண்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜ.செ.க.வின் பத்துகவான் தொகுதி உறுப்பினரான கஸ்தூரி பட்டுவும், கூலாய் தொகுதி உறுப்பினர் தியோ நீ சிங்கும் வலியுறுத்தியுள்ளனர். மலிண்டோ நேர்காணலுக்குச் சென்ற ஒரு பெண் மேலாடையை அகற்ற வேண்டும் என்று பணிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறி போலீஸ் புகாரும் செய்துள்ளார். இது குறித்து தெ மலாய் மெயில் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. இது 2017. இந்த ஆண்டில் மலேசியாவில் இது போன்ற சம்பவம் இன்னமும் நடப்பது அதிர்ச்சித் தருகிறது என்று கஸ்தூரி குறிப்பிட்டார். பெண்களை அவமதிக்கும், பாகுபாடு செய்யும், இழிவுப்படுத்தும் நோக்கத்திலான இதுபோன்ற செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். விமானப் பணிப்பெண் வேலைக்காக நேர்காணலுக்கு வரும் பெண்கள் அவசர வேளைகளில் எப்படி அமைதியாக இருப்பது, எவ்வாறு பயணிகளை கவ னிப்பது, எப்படி தெளிவாகப் பேசுவது, கருணை காட்டுவது, பணிவாக நடந்து கொள்வது என்ற அடிப்படையில் அவர்கள் பேட்டி காணப்பட்டால், அது முறையாகும்.பெண்கள் உடலில் பச்சை குத்தியிருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், தேர்வு. அவர்களை வேலைக்கு எடுப்பதா இல்லையா என்பது அந்த நிறுவனத்தை பொறுத்தது. இருந்தாலும், இதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவும் ஒரு வகை பாரபட்சம்தான் என் றார் கஸ்தூரிபட்டு. மேலும் பல்வேறு கலாச்சார பண்புகளுக்கு முன்னோடியாக விளங்கும் மலேசியாவில் ஒரு விமான நிறுவனம், நேர்காணலுக்கு வரும் பெண்களிடம் இத்தகைய அநாகரிகமாக நடந்து கொள்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அதிகமான பெண்கள் கருத்து தெரிவித்தனர். அதுவும் நேர்காணலுக்கு தலைமையேற்ற பெண்களே, நேர்காணலுக்கு வரும் இளம் பெண்களிடம் மேலாடையை கழற்ற சொல்வது எந்த வகையில் பண்பான செயல் என்பதை மலிண்டோ ஏர் விளக்க முடியுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நாகரிகமற்ற செயலை மலிண்டோ ஏர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அந்த நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img