img
img

தமிழாசிரியர்களை நியமிப்பதில் கல்வி அமைச்சு தயக்கம்!
புதன் 05 ஏப்ரல் 2017 12:41:11

img

நாடு தழுவிய நிலையில் பத்து அரசாங்க ஆறாம் படிவ கல்லூரிகள் செயல்படத் தொடங்கியிருக்கும் வேளையில் அவற்றில் தமிழாசிரியர்களை நிய மனம் செய்வதில் கல்வி அமைச்சு தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதற்கு தீர்வே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மலேசிய இந்தியர் களின் தேவைகள் தொடர்பில் கேட்டாலும் கிடைப்பதில்லை, தானாகவும் கவனிக்கப்படுவ தில்லை என்ற அவலமான நிலையைத்தான் பெற்றுள் ளதை ஏவுகணை சொல்லிச் சொல்லியே அலுத்துவிட்டது. மலேசிய இந்தியர்கள் தொடர் பான விவகாரங்களைக் கேட் பதற்குக் கூட நாதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கின் றோம் என்பது மட்டும் உண்மை. மலேசியாவின் மக்கள் தொகையில் இந்தியர்களின் விழுக்காடு சரிவு கண்டு வந்தி ருக்கும் நிலையில் இன்று 7 விழுக்காட்டிற்கும் குறைவா கவே இருக்கின்றோம் என்ற சூழ்நிலையிலும் வேறு எந்த இனத்தவருக்கும் இல்லாத அளவு கூடுதலான அரசாங்க சார்பு அரசியல் கட்சிகளும், எதிர்கட்சியின் அரசியல் கட்சி களும் இந்தியர்களுக்கு மட் டுமே என்பதை பெருமை யோடு கூறுவதா அல்லது வாங்கி வந்த வரம் என்பதாக விசனப்படுவதா என்றே ஏவு கணைக்கு விளங்கவில்லை. 60 ஆண்டுகளுக்குப் பின்ன ரும் அடிப்படை உரிமைகளான குடியுரிமை, தமிழ்மொழிக் கல்வி, வேலை வாய்ப்புகள் மற் றும் உயர்கல்வி வாய்ப்புகளுக் காகக் கையேந்தி நிற்கும் சமூக மாக நம்மை உருமாற்றியிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் இமாலய சாதனைகளை மனக் குமுறல்களோடும் வேதனையோ டும் பார்த்து கொண்டிருக்கும் அவலத்திற்குத் தீர்வே ஏற்படாதா என்ற பிரார்த்தனையையே ஏவு கணையால் செய்ய முடிகின்றது. தமிழ்க்கல்வி உரிமை பறிபோகின்றதா?: மலேசியக் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்சிர் காலிட் இன்று தொடங்கி நாடு தழுவிய நிலையில் 10 அரசாங்க ஆறாம் படிவக் கல்லூரிகள் (Kolej Tingkatan Enam) செயல்படத் தொடங்கும் என அதிகாரப்பூர்வ மாக அறி வித்தார். * ஆறாம் படிவக் கல்லூரி பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் * ஆறாம் படிவக் கல்லூரி கெப்போங், கோலாலம்பூர் * ஆறாம் படிவக் கல்லூரி கூலிம், கெடா * ஆறாம் படிவக் கல்லூரி கோத்தா கினபாலு, சபா * ஆறாம் படிவக் கல்லூரி பொந்தியான், ஜொகூர் * ஆறாம் படி வக் கல்லூரி சாரா தோக், சரவாக் * ஆறாம் படிவக் கல்லூரி ஈப்போ, பேரா * ஆறாம் படிவக் கல்லூரி கிள்ளான், சிலாங்கூர் ஆகிய ஆறாம் படிவக் கல்லூரி களோடு மேலும் சில ஆறாம் படிவக் கல்லூரிகளும் 2017ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை மலே சிய இந்தியர் சமூகத்தின் மாணவர்கள் அறிந்துள்ளனரா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் மேற்கண்ட ஆறாம் படிவக் கல்லூரி களில் தமிழ் மொழி யைப் போதிப் பதற்கான ஆசிரியர்கள் மருந் துக்குக் கூட மலேசியக் கல்வி யமைச்சு நியமனம் செய்யாததை நமது சமூகத்தினைப் பிரதி நிதிப்பதாகக் கூறிக்கொள்ளும்: * ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் * பத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் * 9 மாநிலத்தைப் பிரதிநிதிக் கும் மாநில தமிழ்மொழி துணைக் கல்வி இயக்குநர்கள் * மலேசியக் கல்வியமைச் சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் * இந்திய சமூகத்தினைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள் ளும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் * மலேசிய இந்தியர் களுக்கான ஒரே ஒரு அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சுப்பிரமணியம் * மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பொறுப்பாளர்கள் அனைவரும் எதுவுமே நடவாததுபோல் இருந்து வருவது நியாயமா? என ஏவுகணை வேதனையோடு கேட்கின்றது! மாணவர்கள் தயார்! ஆசிரியர்களைக் காணோம்!: நாடு தழுவிய நிலையில் செயல்பட்டு வரும் ஆறாம் படிவக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடத் தினைத் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பணியில் மலேசிய நண்பன் பேரளவிலான முயற்சியை மேற்கொண் டிருந்த நிலையில் வரும் 16.4.2017ஆம் நாள் முதல் ஆறாம் படிவத்திற்கான முடிவுகளைத் தெரிந்து கொண்டு 2.5.2017ஆம் நாளில் ஆறாம் படிவத்திற்கான முதலாம் பரு வத்தில் (Semester 1) சேர விருக்கும் இந்திய மாண வர்களுக்குத் தமிழ் மொழியைப் போதிப்பதற்கான தமிழாசிரி யர்களை நியமனம் செய் யாமல் இருப்பதை (ஆறாம் படிவக் கல்லூரி ஈப்போ, பேராக்கைத் தவிர) மலேசியக் கல்வியமைச்சு கண்டுகொண்டதா என்ற கேள்வியை ஏவுகணை எழுப்ப விரும்புகின்றது. 60 ஆண்டு கால சுதந் திரத்திற்குப் பின்னரும் ஆறாம் படிவத்தில் தமிழ்மொழியை முழு நேரமாகப் போதிப்பதற்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள; * போர்ட்டிக்சன் உயர்நிலைப் பள்ளி * டத்தோ தஹா இடைநிலைப் பள்ளி, பகாவ். டத்தோ மன்சோர் இடைநிலைப்பள்ளி தம்பின் ஆகிய மூன்று பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருப்பதைப் பல முறை கூறியும் இதுவரை மற்ற பள்ளிகளுக்கான நியமனம் ஓடும் நீரில் எழுதிய எழுத்தாகவே மறைந்துவிட்டதாக ஏவுகணை கருதுகின்றது. தேர்வு வாரியத்தில் அனாதையான தமிழ்மொழி ஆறாம் படிவத்திற்கான பாடத் திட்டங்கள், தேர்வு தாட்கள், தேர்வு முடிவுகள் போன்ற வற்றிற்கு முழுமையான பொறுப்பினை ஏற்றிருக்கும் மலேசியத் தேர்வு வாரியத்தில் (Majlis Peperiksaan Malaysia - MPM) தமிழ்மொழிப் பாடத்திட்டத்தினைத் தயாரிக் கும் பொறுப்பினை மேற்பார்வை செய்யவும், தமிழ் மொழிக்கான தேர்வு தாட்களைத் தயாரிக்கவும், தமிழ் மொழியில் போதனா நடைமுறைகளைப் பார்வை யிடவும் ஓர் இந்திய அதி காரியைக் கூட நிய மனம் செய்ய முடியாமல் தமிழ் மொழி அநாதையாக்கப் பட்டிருக்கும் கொடுமைக் குக்கூட நமது அரசியல் பிரதிநிதித்துவத்தால் தீர்வினை ஏற்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏவுகணைக்கு உள்ளது. ஆனால், நாட்டில் உள்ள வேறு யாருக்குமே இல்லையே என்ற ஏமாற்றத்திற்கு 60 ஆண்டுக ளாகியும் தீர்வே இல்லை என்பதுதான் உண்மையாகும். துணைக் கல்வியமைச்சர் கவனிப்பாரா?:ஆறாம் படிவம் போதிப் பதற்கான தமிழாசிரியர்களை நியமனம் செய்வதில் கல்வி அமைச்சின் மனிதவளப் பிரிவு (Bahagian Sumber manusia KPM) மெத்தனமாகவே செயல்பட்டு வருவதற்கு நிரந்தரமான தீர்வினை ஏற்படுத்த வேண்டி சில நடவடிக்கைகளை மலேசிய கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மேற்கொண் டுள்ளதாக ஏவுகணைக்குக் கிடைத்த தகவல்கள் உண்மை யானால் அம்முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்த்து, 2017/ 2018ஆம் கல்வியாண்டிற்கான ஆறாம் படிவ இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைத் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கு வாரா? என்ற கேள்விகளோடு மீண்டும் சந்திப்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img