மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் வீடு கிடைக்குமென்று இருவரை ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்ட வழக் கறிஞர் சாந்தி (வயது 48) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த இருவரிடமும் மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை சாந்தி ஏமாற்றிப் பெற்றிருக்கிறார். மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பில் முதலீடு செய்தால் அவர்களுக்குச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் வீடு கிடைக்கும் எனக்கூறி அவர்களை ஏமாற்றியதாக சாந்தி மீது குற்றம் பதிவாகியுள்ளது. ஆனால், அவர் பயன்படுத்திய அடுக்குமாடி குடியிருப்பின் பெயர் உண்மை இல்லையென்றும் அப்படி ஒரு அடுக்குமாடி குடியிருப்பபைக் கட்டும் திட்டமே இல்லையென்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நீருபிக்கப் பட்டால், அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம். வழக்கறிஞர் சாந்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவருக்கு 15 ஆயிரம் வெள்ளி ஜாமின் விதிக்கப்பட்டது. மே மாதம் 4 மற்றும் 8ஆம் தேதிகளில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்