குட்டி ராஜா என்று சுற்று வட்டாரத்தில் அழைக்கப்படும் சுகுமாறன் த/பெ ஆறுமுகம் (வயது 34) என்ற இளைஞர் நேற்று முன்தினம் இரவு இங்கு கத்தி யால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட குட்டி ராஜா என்பவர் தாமான் சினாரானிலுள்ள அவரின் வீட்டில் இரவு 11.30 மணிவரை தன் இரு நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். நேரம் ஆனதால் அவரின் நண்பர் கள் அங்கிருந்து புறப்படும் வேளையில், புரோட்டோன் ஈஸ்வரா ரகக் கார் குட்டி ராஜா வீட்டிற்கு முன்னால் வந்து நின்றுள்ளது. திடீரென காரிலிருந்து இறங்கிய இரு ஆடவர்கள் கத்தியைக் கொண்டு குட்டி ராஜாவை தாக்கியுள்ளனர். கத்தி குத்துக்கு ஆளான குட்டி ராஜா தன்னை காப்பாற்றிக் கொள்ள வீட்டிற்குப் பின்னால் உள்ள செம்பனைத் தோட்டத்திற்குள் ஓடியுள்ளார். இருள் சூழ்ந்து இருந்த அந்த தோட்டத்தில் அவரை தேட முடியாததால் தாக்குதலை நடத்திய இருவரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட குட்டி ராஜாவின் இரு நண்பர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியை நாடியுள்ளனர். செம்பனைத் தோட்டத்திற்குள் சென்ற குட்டிராஜாவை அங்கு கூடிய பொதுமக்கள் தேடியுள்ளனர். அதிகாலை 4.30 மணி வரை அவரை தேடி கண்டு பிடிக்க முடிய வில்லை. காலை 7.15 மணியளவில் அந்த தோட்டத்திற்கு சென்ற இந்திய மாது குட்டி ராஜாவின் சடலத்தை கண்டுள்ளார். இதன் தொடர்பில் அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் போது அவர் கால் சட்டை மட்டும்தான் அணிந்திருந்துள்ளார். சேற்றில் விழுந்துள்ளதால் குட்டி ராஜாவின் உடல் முழுவதும் சேறாக இருந்தது. அவரின் நெஞ்சுப் பகுதிக்கு கீழ் கத்திக் குத்து காயங்களும் முதுகில் கீழே விழுந்து அடிபட்ட காயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் தொடர் பில் இரு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தம் பட்டிருக்கலாம் என நம்பப்படும் மேலும் இருவரை போலீசார் தேடி வருவதாக பத்தாங் பெர்ஜுந்தை காவல் துறையின் பேச்சாளர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட குட்டி ராஜாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரின் இழப்பு குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்