ஸ்ரீ பந்தாய் பிபிஆர் அடுக்குமாடி வீட்டில் குடியி ருக்கும் மாற்றுத் திறனாளி நீலாம் பிகைக்கான சமூக நல இலாகாவின் உதவிப் பணம் நிறுத்தப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது குடியிருக்கும் பண்டாராயா அடுக்குமாடி வீட்டிற்கு வாடகை கட்ட முடியவில்லை. மாற்றுத் திறனாளியான இவர் பல வழிகளில் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார். வீட்டை விட்டு பொருட்களோடு 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று நீலாம்பிகைக்கு மாநகர் மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழங்கப்பட்ட கால அவகாசத் திற்குள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை காலி பண்ணாவிட்டால் அனைத்துப் பொருட்களும் பறிமுதல் செய் யப்படும் என்றும் மாநகர் மன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏது செய்வது என்ன செய்வது என்று தத்தளிக்கும் இந்த மாற்றுத் திற னாளியை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. முரளி தலைமையிலான தமிழன் கரங்கள் என்ற அமைப்பு தற்போது இம்மாதுவிற்கு ஓரளவு உதவி செய்கிறது. எனினும் இந்த மாற்றுத் திறனாளியின் மனக் குறைக்கு நிரந்தர பரிகாரம் வேண்டும். சரியாக நடக்க முடியாத மாற்றுத் திறனாளிக்கு உதவிக் கரம் நீட்ட அரசு சாரா அமைப்புகள் அல்லது கருணை கரங்கள் உதவி நல்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. உங்களின் உடன் பிறப்புகளில் ஒருவராக என்னை நினைத்து எனக்கு அபயக்கரம் நீட்டுவீர் என்று, மாற்றுத் திறனாளி நீலாம்பிகை கண் கலங்க மன்றாடுகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்