நாட்டின் 15ஆவது பேரரசர் சுல்தான் முகமட் தி அரியணை அமரும் விழாவை முன்னிட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா ஓர் அறிக்கையின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நாட்டின் 15ஆவது பேரரசராகப் பொறுப்பேற்றுள்ள கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகமட் தி அரியணை ஏறும் விழா இம்மாதம் 24ஆம் தேதி காலையில் இஸ்தானா நெகாராவின் பாலாய்ரூங் ஸ்ரீ-யில் நடைபெறும். அன்றிரவு அரச விருந்தும் நடைபெறும் என அலி ஹம்சா குறிப்பிட்டார். இதனை அடுத்து, மே மாதம் 2ஆம் தேதி அரச அருங்காட்சியகத்தில் நம் அரசர் என்ற கண்காட்சி நடத்தப்படும் என்றாரவர். 47 வயதான சுல்தான் முகமட் கடந்த டிசம்பர் 13 ஆம் நாள் நாட்டின் 15 ஆவது பேரரசராக நியமிக்கப்பட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்