சிலாங்கூர் மாநிலத்தில் டெங்கில் பட்டணத்திற்கு அருகில் அம்பார் தெனாங் தோட்டத்தில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்தவர்களின் ஒரே ஒரு வர லாற்றுப்பூர்வ சின்னமாக இருந்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தையும் அழிக்க நினைக்கும் ஆட்சிக்குழு உறுப்பினரின் நடவடிக்கைக்கு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உடந்தையாகச் செயல்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு சுமார் 200 பேர் விடைகாண விரும்புவதாக நண்பன் குழு கருதுகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இடம் பெயர்விற்கு உட்படுத்தப்பட்ட சுமார் 300 இந்திய குடும்பங்கள் தங்களின் வாழ்வியலையும் அடையாளங் களையும் இழந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான ஆலயம், இடுகாடு, தமிழ்ப்பள்ளிகளையும் இழப் பதற்கான நடவடிக்கைகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மனச்சாட்சியே இல்லாமல் செயல்படுவது நியாயமா என பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு யார் பதில் தரப் போகின்றார்கள்? முதலை வாயிலிருந்து புலியின் வாயிற்குள்! சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் முதலை வாயிலிருந்து தப்பிப்பதற்காக புலியின் வாயில் நுழைந்த சூழலைத்தான் முழுமையாக எதிர்நோக்கியிருப்பதாக நண்பன் குழு கருதுகின்றது. டெங்கில் அம்பார் தெனாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் பஞ்சமுக விநாயகர் ஆலயம் நிர்வாகத்தின் செயல்பாடுகளை யார் நிர்ணயம் செய்தது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவே நண்பன் குழு கருதுகின்றது. இதற்கிடையே சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் உத்தரவின் பேரில்தான் 30.9.2016இல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்; * எஸ்.டி. புரோப்பர்ட்டி (SD Property Sdn. Bhd.) நிறுவனம் ஹிண்ட்ராப்பின் கடிதத்தினை உதாசீனப்படுத்த வேண்டியும்; * பஞ்சமுக ஆலயத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிக்கையினை வெளியிட வேண்டும். போன்ற நடவடிக்கைகளை ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவித்தாரா என்பதை பொதுமக்கள் அறிய விரும்புகின்றனர். சிலாங்கூர் மாநிலத்தில் ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் இடுகாட்டு நிலங்கள் தொடர்பான விவகாரங்களைத் தீர்க்க வேண்டிய மந்திரி புசார் எதிர்மறையாகச் செயல்படுவது நியாயமா என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் இருப்பதை நண்பன் குழு வலியுறுத்துகின்றது. தோட்ட மக்களின் கோரிக்கைகள்: டெங்கில், அம்பார் தெனாங் தோட்ட மக்களின் அடிப்படை உரிமையைக் கூட கேட்டுப் பெற முடியாத மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினரின் செயல்பாடுகளை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹிண்ட்ராப் தலைமையில் கூடியவர்களின் கோரிக்கைகளை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் ஆய்வு செய்ய வேண்டும் என்பதனை நண்பன் குழு வலியுறுத்து கின்றது. * ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 100 ஆண்டுகளுக்கும் மேலான மாரியம்மன் ஆலயத்தினை இருக்கும் இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும். * குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் நிலமாவது ஆலயத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். * ஆலய மறு நிர்மாணிப்பிற்கு நியாயமான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். * அம்பார் தெனாங் தோட்ட இந்தியர்களின் வரலாற்றுச் சின்னமான ஆலயத்தை அழித்துவிட வேண்டாம். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சிலாங்கூர் மாநில இந்தியர்களைப் பொறுத்தவரையில் மக்கள் கூட்டணி அரசாங்கமும் இந்தியர்களைக் கைவிட்டு உள்ளதாகவே உணர்ந்து வருகின்றனர். ம்பார் தெனாங் ஆலய விவகாரத்திற்கு தீர்வு வருமா?வராதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்