தங்களுக்கு வேறு இடம் இல்லாததால் மூட்டைப் பூச்சிகளின் கடியில் தனது பிள்ளைகளுடன் இரவில் தூங்குவது கொடுமையாக இருப்பதாக 38 வயது டைய ஆர்.லெட்சுமி தனது மனக்கு முறலை வெளியிட்டார். பாசிர் கூடாங்கிலுள்ள தொழிற் சாலையொன்றில் துப்புரவு பணியினை மேற்கொண்டுள்ள ஆர்.லெட்சுமி தானும் தனது 10, 12 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் தாமான் கோத்தா மாசாய் கடை வீட்டின் மேல் மாடியில் கடந்த ஏழு மாதங்களாக வாடகைக்கு இருந்து வருவதாக தெரிவித்த அவர் இரவில் மூட்டை பூச்சிகளின் கொடுமையால் தானும் தனது இரு பிள்ளைகளும் அரிப்பினால் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டார். தனது கடைசி மகளுக்கு உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு ஊசி போடும் நிலைக்கு வந்து விட்டதாக தெரிவித்த ஆர்.லெட்சுமி பலகையைக் கொண்டு அறை தடுக்கப்பட்டதால் தினமும் அதிகமான மூட்டைப் பூச்சிகள் படையெடுத்து எங்களின் இரத்தத்தை உறிஞ்சி வருவதாகவும் குறிப்பிட்டார். பலகை யைக் கொண்டு அறை தடுக்கப்பட்டதால் அறை எப்போதும் இருளை சூழ்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஆர்.லெட்சுமி தனது இரு பிள்ளைகளின் உடல் நலம் குறித்து கவலைப்படுவதாகவும் தெரிவித் தார். கடந்த ஆண்டு முதல் தனியாக வாழும் ஆர்.லெட்சுமி ஆயிரம் வெள்ளி வருமானத்தைக் கொண்டு வேறு வாடகை வீட்டை பார்க்க முடியாத சூழ் நிலையில் தற்போதைய வாடகை வீட்டுக்கும் ஒரு மாதம் பாக்கி இருப்பதாக தெரிவித்த அவர் எனினும் தனக்கு இடம் கொடுத்து உதவிய உரிமையா ளருக்கு நன்றி கூறுவ தாகவும் தெரிவித்தார். ஆர்.லெட்சுமிக்கு மாற்று வாடகை வீடு கிடைக்க ஜொகூர் மந்திரி புசாரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ள தாகவும் மஇகா கிளைத் தலைவர் கே.விஜயன் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்