தங்களின் வாழ்நாளில் ஒவ்வொரு பத்து மலேசியர்களில் நால்வர் மனநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் என்று மனோவியல் நிபுணர்கள் தெரிவித்துள் ளனர். இந்த எண்ணிக்கை தொடர் ந்து ஏறுமுகம் காணலாம். இத்தகைய பாதிப்புக்கு உட்பட்டவர்கள் மற்றவர்கள் தங்களை தாழ்வாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் காரணமாக இப்பிரச்சினை குறித்த எண்ணிக்கை விவரம் முழுமையாக தெரியாமல் போகிறது. மன உளைச்சல் மற்றும் இதர மனநோய் சம்பந்தமான விவ காரங்களுக்கு சிகிச்சை வழங் குவதில் முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்று ஐஎம்யு என்ற அனைத்துலக மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் பிலிப் ஜோர்ஜ் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு வாக்கில் 340 மில்லியன் பேர் மன உளைச்சலால் பாதிக்கப்படுவர் என்று உலக வங்கி தனது அறிக் கையில் தெரிவித்துள்ளது. மன நோய் என்பது ஏழை எளியவர் களை மற்றும் தனி மையில் இருப்பவர்களை மட்டுமே பாதிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது எவருக்கும் வரும். குறைந்தபட்சம் 10 விழுக்காடு மலேசியர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் பிலிப் ஜோர்ஜ் தெரிவித்தார். ஆசிய மக் கள் தங்களின் மனக்குறைகளை வெளிப் படையாக பேசுவதில்லை. பலர் மன பாதிப்பு பிரச்சினையை ஒரு பலவீனமாக எடுத்துக் கொள்கின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்