சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் எதிரொலியால் அதன் பாதிப்பை எதிர்நோக்கியிருப்பது அங்குள்ள இந்தியர் களே என்பதை நண்பன் குழு பெற்றுள்ள புகார்கள் உறுதிப்படுத்துகின்றன. சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மக்கள் கூட்டணி அரசாங்கம், சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளதா? என்ற கேள்விக்கு மத்தியில், டெங்கில் அம்பார் தெனாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரம் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத் திருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அந்த ஆலயத்தை அப்புறப்படுத்தும் நோட்டீஸ் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள நண்பன் குழு விரும்புகின்றது. அம்பார் தெனாங் ஆலய சர்ச்சை ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலய அமைப்பின் கீழ் இருந்து வரும் அம்பார் தெனாங் ரப்பர் டிவிஷன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 1890 -ஆம் ஆண்டில் கட்டப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. அங்குள்ள சுமார் 300 இந்தியக் குடும்பங்களுக்கு அருள் பாலித்து வந்த ஆல யத்திற்கு மாற்று நிலம் வழங்குவதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தடையாகச் செயல்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? தொடக்கக் காலத்தில் கத்ரி நிறுவனத்திற்கு (Guthrie) உரிமையான அம்பார் தெனங் தோட்டத்தின் இரப்பர் டிவிஷன், தேயிலை டிவிஷன், செம்பனை டிவிஷன்களை உட்படுத்தி 900 இந்தியக் குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்ய கட்டப்பட்ட இந்து ஆலயங்களுக்கான நில உரிமையை 2000- ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட சைம் டார்பி(Sime Darby) நிறுவனம் வழங்கவில்லை என்பது மட்டுமின்றி 2010 -ஆம் ஆண்டில் எஸ்.டி.புரோப்பட்டீர்ஸ் (SD Properties) நிறுவனத்திற்கு உரிமையைக் கைமாற்றியது. சிலாங்கூர் மாநில ஆட்சியினை 50 ஆண்டுகளாக நடத்திவந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அஸ்திவாரமாக இருந்த விவகாரம் இந்து ஆலயம் என்பதன் அடிப்படையில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இந்த ஆலயங்களுக்காகப் போராடும் என நம்பியது கானல் நீராகிப் போனதாக அம்பாங் தெனாங் தோட்ட மக்கள் நண்பன் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்