பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இந்திய வருகையின் போது அனைத்துலக நலன்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி காந்த் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.சென்னையில் ரஜினி காந்தை சந்தித்த பிரதமர் நஜீப் செல்ஃபி எடுத்துக்கொண்டார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயமாக இது இருந்தது. ஆனால், அந்த சந்திப்பின் போது பிரதமரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அங்கில்லை என்பதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை பிரதமர் நஜீப் சந்தித்தா போது ரோஸ்மா அங்கில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தை ரோஸ்மா சந்திக்கவில்லை என்பதை நான் உறுதியாகக் கூற முடியும். இந்தியாவிற்கான அவரின் பயண திட்டத்தில், அல்லது நிகழ்ச்சி நிரலில் இது இடம்பெற்றிருக்கவில்லை என்று ரோஸ் மாவின் உதவியாளர் ரிஸால் மன்சோர் கூறியதாக மலேசிய கினி தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமரின் முழு நிகழ்ச்சி நிரல் அல்லது அவரின் பயண திட்டம் குறித்து ரோஸ்மாவுக்கு தெரியாது. அதில் அவர் தலையிடுவதும் இல்லை. ஆகவே, பிர தமர் நஜீப்பிற்கும் ரஜினி காந்துக்கும் இடையிலான சந்திப்பு குறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று ரிஸால் நேற்று அறிக்கை வழி தெரிவித்தார். சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் பரிந்துரைத்திருப்பது போல மலாக்காவின் சிறப்பு தூதராக ரஜினி காந்தை நியமனம் செய் வது தொடர்பில் அவர்களின் சந்திப்பு இருந்திருக்கக்கூடும் என அவர் கருத்துரைத்தார்.இருப்பினும், ரஜினி காந்த் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதில் ரோஸ் மாவுக்கு ஐயப்பாடு கிடையாது. அவரை மதிப்பவரும் கூட. ஆனால், அவரை சந்திக்க ரோஸ்மாவும் விரும்பியதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று ரிஸால் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்