தங்களின் இரு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி இது நாள் வரையிலும் வீடு திரும்பாததால் அவர்களை கண்டுபிடிப்பதில் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார் கணவர் ரவி. இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. என் மனைவி பர்லா லட்சுமி, மூத்த மகன் சதீஸ்ராவ், மகள் இஸ்னா ஸ்ரீ மூவரும் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். எங்க ளுக்குள் மனக்கசப்போ பிரச்சினையோ இல்லை. நானும் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியவில்லை என்று அவர் மலேசிய நண்பனிடம் தெரிவித்தார். மனைவியும் பிள்ளைகளும் காணாமல் போன பிறகு, கடந்த மார்ச் 6-ஆம் தேதி ஜெபமணி என்ற ஒரு பெண் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும், ரவாங் கில் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறியதாகவும் ரவி விவரித்தார். அந்தப் பெண்ணுடன் போராடி உடனே அவர்களை என்னிடம் அனுப்பிவைக்கும்படி கூறியதற்கு, மறுநாள் மார்ச் 7-ஆம் தேதி அவர்களை அனுப்பி வைக்க உறுதியளித்தார். ஆனால், இன்று வரை என் மனைவியும் பிள்ளைகளும் என்னிடம் வரவில்லை என்று அவர் மேலும் சொன்னார். போலீசில் புகார் செய் திருப்பதுடன், மனைவியையும், பிள்ளைகளையும் கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை ரவி நாடியுள்ளார். விவரம் அறிபவர்கள் 012-5616600 என்ற தொலைபேசி எண்ணில் ரவியுடன் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்