உலுசிலாங்கூர், ஏப். 3- நேற்று காலை மணி 7.40 க்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 403.3 கிமீ லெம்பா பெரிங்கின் அருகே நடந்த கனரக லோரி மற்றும் சாங் யோங் ரக கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பலியாகினர். வடக்கு நோக்கி மண்ணை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரி கட்டுப் பாட்டை இழந்து வலது புறமுள்ள தடுப்பு இரும்பை மோதி பின்புறம் வந்த காரின்மேல் சாய்ந் ததால் காரில் பயணித்த அறுவரும் காருக்குள் ளேயே நசுங்கி மாண்டனர். லோரி ஒட்டுநர் முகமட் ஷாருல் நிஸாம் (27 வயது) எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பிய வேளையில் காரின் ஓட்டுநர் உட்படஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரும் மாண்டனர். பூச்சோங்கிலிருந்து புறப்பட்ட காரில் பயணம் செய்தவர்கள் ஓட்டுநர் லாம் வாய் லூன் (46), லாம் ஜீ யாங் (19), லாம் லியோங் சாவ் (76), லாம் வாய் கியாட் (35), வோங் செக் லீ (53), லாம் ஜீ ஹொங் (13) என தெரியவந் துள்ளது. விபத்தில் பலியான அறுவ ரின் சட லங்கள் பிரேதப் பரிசோதனை க்காக கோலகுபுபாரு மருத்துவமனை க்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் விசாரணைக்காக காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்ட லோரி ஓட்டுநர் சிறுநீர், இரத்த பரி சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாக உலுசிலாங்கூர் காவல் துறை தலை வர் சூப்ரிண் டெண்டன் இரா.சுப்பிர மணியம் தெரிவித்தார். காலையில் தகவல் அறிந்து விபத்து நடந்த சம்பவத்திற்கு வந்த கோலகுபுபாரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி படையினர் நசுங்கிய காரில் சிக்கிய உடல் களை வெளி யேற்ற சுமார் 1 மணி 15 நிமிடங்கள் பிடித்ததாகவும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்