ஆறுவயது சிறுவன் ஒருவன் படுவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் காப்பார் நெடுஞ்சாலையில் குப்புறக் கவிழ்ந்தது. இருப்பினும் காரை ஓட்டி வந்த அச்சிறுவன் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பியதாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர். நேற்றும் முன்தினம் நண்பகல் 12.00 மணியளவில் கிள்ளானிலிருந்து காப்பார் செல்லும் நெடுஞ்சாலையில் 8-ஆவது மைல் புக்கிட் காப்பார் அருகில் இச் சம்பவம் நடந்தது. கார் ஒன்று தடம்புரண்டதைக் கண்ட அங்குள்ள பொதுமக்கள், காரிலிருந்தவர்களைக் காப்பாற்ற ஓடி வந்தபோது, 6 வயது சிறுவன் மட் டும் அக்காருக்கடியில் மாட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவனைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். அதன் பின் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர்தப்பிய அச்சிறுவனிடம் விசாரித்தபோது, தன் அக்காள் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வதைக் கண்ணுற்று அவரைப் பின் தொடர்வதற்காக வீட்டிலிருந்த கார் சாவியை எடுத்து சொந்தமாக அக்காரைச் செலுத்தியதாக அச்சிறுவன் பதிலளித்துள்ளான்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்